Saturday, March 12, 2022

சிறுகதைத்தொகுப்புகளில் உள்ளடக்கப்படாத கதைகள்

 காப்பாற்றத்திருவுளமோ.?

  

வெட்டியடிக்குது மின்னல் - கடல்ää

வீரத்திரை கொண்டு  வி;ண்ணையிடிக்குது.

கொட்டியிடிக்குது மேகம் - கூ..கூவென்று

விண்ணைக்குடையுது காற்று..

 

பாரிய குண்டு வெடிப்பு ஒன்று வானத்தில் நிகழ்ந்தது. அந்தப் பேரிடியைத் தொடர்ந்துää  அதுவரையும் கமறிக் கொண்டிருந்த வானம் பொழிய ஆரம்பித்தது.  மழையென்றால் அப்படி ஒரு மழை. வானம் இறைத்துக் கொண்டிருந்தது. இடி முழங்கியதில்ää தொடர் மாடி மனையின்  ஒளிவாங்கிகள் குலுங்கின. மின்சாரக் கம்பங்கள் கூடத் தெரியவில்லை. மாலை நான்கு மணிதான். ஆயினும்ää மழையால் கட்டப்பட்ட நீர்ச்சுவர் எல்லாவற்றையும் மறைத்தது.    வீதிகள் அனைத்தும்ää வெள்ளம் பாய்ந்தும்ää தேங்கியும் வடிகான்களாகக் காட்சியளித்தன. பேரிடி ஓயும் போதும்ää மழையின் சத்தம் சற்றுக் குறையும் போதும்ää எங்கோää அருகிலிருந்து  ஒரு நாயின் நீண்ட அவலக்குரல் ஒலித்தது.

 

      பெரும்பாலும்ää சிங்களக் குடியிருப்பார்களை உள்ளடக்கியää  அந்த தொடர்மாடித் தொகுதியின்ää ஆகக் கீழ்த்தளத்தில்ää  இரண்டு படுக்கையறை வசதிகளுடன்ää கூடியதும்ää வீதியைப் பார்த்து முகம் கொண்டதுமான வசதியான வீடு அன்ஸாருடையது.

 

      வீட்டின்ää சகல கதவு யன்னல்களையும் இறுக்கிப் பூட்டிவிட்டுää  தன் ஐந்து வயது மகன் ரஹ{மானைத் தூக்கித் தோளில் வைத்தபடிää ஒரு மேசை மீது ஏறி நின்றுää  கதவு நிலைக்கு மேலாகவுள்ள காற்று வாங்கியூடாகää மழைத்தாண்டவத்தை பார்த்துக் கொண்டிருந்த இவன்ää அன்ஸார்ää ஒரு முச்சக்கரவண்டிச் சொந்தக்காரன். சாரதியும் அவனே.. இன்று வெள்ளிக்கிழமை. சுயவிடுமுறை. மனைவி கமர்ஜானுடனும்ää  தோளின் மீதிருக்கும்ää தனதுää ஐந்து வயது ஒரே மகன் ரஹ{மானுடனும்ää மனதில்ää பாரதியாருடனும் இன்றைய  மழைப் பொழுதைக் கழித்துக் கொண்டிருந்தான். அன்ஸார் இளையபாரதி என்ற புனைபெயரில்ää கவிதை எழுதி  பத்திரிகைகளில் வந்திருக்கிறது.

 

தூற்றல் கதவு சாளரமெல்லாம்ää

தொளைத் தடிக்கிறது.- பள்ளியிலேää

வானஞ் சிவந்தது.. வைய நடுங்குது.

 

போதும்.. பாட்டும்ää மளப் புதினமும்.. கீழே இறங்கிருங்க..

 

மனைவி கமர்ஜானின் சொல்லுக்கு உடன் மதிப்பளித்த அன்ஸார்  மேசையை விட்டும் கீழே இறங்கினான்.

 

சரியாக் கூதல் கொடுகுது.. ஏ..கமர்ää சூடா ஒரு பிளேன்ரீ தாங்களேன்...  டே.. ரஹ{! பாப்பாப் பாட்டுப் பாடியது யாருடா மஹேன்..சொல்லு..!

 

ப்பா.. தெரிம்பா.. பாததியாரு..!

 

வெரிகுட்.. அவரு ஒரு மளைப் பாட்டும் படிச்சிரிக்காரு..ம்பி..

 

படிச்சிக்காட்டப்பா.. பாஹதியார்ர பாட்டப் படி..ப்பா..

 

சட்டச்சட சட்டச்சட டட்டா என்று

தாளங்கள் கொட்டிக் கனைக்குது வானம்

எட்டுத் திசையும் இடிய மழை

எங்ஙனம் வந்ததடா தம்பி வீரா..

 

தம்பி வீதா  ல்லப்பா.. தம்பி தஹ{!..  என்று இரசித்துச் சிரித்தான் ரஹ{.

 

எங்ஙனம் வந்ததடா தம்பி   ரஹ{..  சரியா.. எங்ஙனம் வந்ததடி நங்கை கமர்ஜான்..?

 

      அன்ஸார் தேனீர் குடித்து முடித்த போதுää மழை கொஞ்சம் குறைய ஆரம்பித்திருந்தது. இப்போதுää அருகே எங்கோ ஒரு நாயின் அதே ஈனஸ்வர அழு குரல் நீளமாகவும்ää குறுகலாகவும்  விட்டுவிட்டுத் தெளிவாகக்கேட்டது. இதைச் சகித்துக் கொண்டிருக்க முடியாதவனாக அன்ஸார் ரஹ{வைத் தூக்கிக் கொண்டுää முன்நடைபாதைக் கதவைத் திறந்தான்.

 

மதைக்க போவமா..ப்பா..?

 

ல்லடா..காச்சல் வரும்..

 

கொடயப் புடிச்சிட்டுப் போவம்..ப்பா..

 

கமர்ää அந்தக் குடைய எடுங்க...

 

சின்னப்பிள்ள சென்னா ஒடன போஹனுமா..?

 

கெதியா போவம்ப்பா..

 

நெல்ல வாப்பா.. நெல்ல மகன்..

 

அன்ஸார் குடையுடனும்ää ரஹ{வுடனும்  தெருவில் இறங்கி வெள்ள நீரில்ää கால்கள் சிலீரிட்டுக் குளிர நின்றான். ரஹ{வின் பாதங்களையும் நனைத்தான்.  ரஹசிரித்து  இரசித்தான்.  இப்போதுää எதிரிலேயே அந்தத் தெருநாயின் அவலக்குரல் அருகாமையில் கேட்டது.  வீதியின்ää எதிர்ப்புறமிருந்த வெறும் பாழ் வளவின் எல்லைச் சுவரருகேää ஈர மண்ணில் ஒரு தெருநாய் பிரசவம் கண்டிருந்தது.  மழைக்குள் நிகழ்ந்த அந்த அவலப் பிரசவத்தில்ää நான்கு குட்டிகள்.. அவற்றை மழை படாமல்ää காப்பாற்றும் போராட்டத்தில்ää குட்டிகளைத் தன் வயிற்றுக்குள் புதைத்தபடி சுவரோடு ஒட்டிக் கொண்டு கிடந்த நாயின் கண்களில் கொடூரமும்..பயமும்..!  கொட்டும் மழையில் ஏதும் செய்யவொண்ணாது உறுமியது. ஓலமாய்க் குரல் கொடுத்தது. குறுகி நிமிர்ந்து குளிரைச் சமாளித்தபடி குட்டிகளைப் பாதுகாத்தது.. தலையைக் குட்டிகளுக்குள் புதைத்துப் புதைத்து  அவதிப்பட்டதுää ஒருக்களித்து இழுபட்டது. மென்மேலும்  வெள்ள நீர் தன் பக்கம் வராது  மண்ணைப் பிராண்டிப் பிராண்டி வாரி அணை செய்தது.

 

என்னப்பா செய்து அந்த டோக்கு..?

 

குட்டி ஈண்டு இருக்குடா ரஹ{..நாலு குட்டி..

 

எனக்கி ஒரு குட்டி வாங்கித் தா..ப்பா.. போய்த் தூக்கிட்டு வெருவம்.. வா..ப்பா..!

 

பொறுடா ரஹ{..!

 

      அன்ஸார் வெகு ஜாக்கிரதையாக அந்த நாயின் அருகே செல்ல மெதுவாக நீருக்குள் கால்களை உளக்கினான். ஆனால்ää நாய் உடனே விரோதமாகியது.  தன் எதிர்ப்பை உறுமிக் கொடூரமாய் எச்சரித்தது.  பற்களை கோரமாய் கட்டியது. குட்டிகளை விட்டுவிடாமல் போரிடத் தயாரானது.  மழைநீரின்ää ஈரமும்ää குளிரும்விட்டுவிடாமல் போரிடத் தயாரானது.  மழைநீரின்ää ஈரமும்ää குளிரும்ää நாயைச் சுருங்க வைத்திருந்தது.  பிரசவித்த பச்சை உடல் ஒட்டியிருந்தது.  பின்பக்கமாக இரத்தமும் காயமும் தெரிந்தன.  அவலமிக்க மழைப்பிரசவம்.!  நாயின் கண்;களில் தெரிந்த பகையுணர்ச்சியை விடவும் அதன் நிர்க்கதியான நிலை அன்ஸாரை மிகவும் உறுத்தியது.. அவனுக்குள் பாரதியார் வந்து நாயும் நமக்குத் தோழன்.. என்றார். இப்போது என்ன செய்வது..?  ஏதும் சாப்பிடக் கொடுக்கலாமா.. அல்லது..?  எதுவாயினும் நாய் தன்னைத்தப்பாகபுரிந்துகொண்டுவிட்டால்.. அதன் விளைவு மிகவும் விரும்பத்தகாததாயிருக்கும். என்ன செய்யலாம்..எப்படிச் செய்யலாம்.. அதற்கு எப்படி விளங்கப்படுத்தலாம்..அதன் நாய்மொழி என்ன..?

 

பாவம்..ப்பா    டோக்கு.. குட்டி ஒண்டு கேளு.. ப்பா அதுக்கிட்ட.. குட்டி நனய்து..

 

பொறுடா..! கடிச்சிரும்.. விசர் பிடிச்சிருக்கும்.. எதுக்கும் முதல்ல இதுக்கு ஒரு ஊடு கட்டிக்குடுப்பம் செரியோ..அப்பதான் அது  ரஹ{வுக்கு குட்டி தெரும்..

 

செரி..செரி..ப்பா..

 

வா..!

 

தந்தையும் மகனும்ää வீட்டுக்குள்  திரும்பி வந்தனர்.

 

பிள்ளயக் கூட்டிட்டு ந்த மளைக்க விசரு நாய்ட்ட போய் வாரீங்களோ.. மடத்தனமா..?

 

நாங்க டோக்குக்கு ஊடு கட்டப்றம். ம்மா..

 

ச்சீ..என்ன மடத்தனம்..?

 

அன்ஸார் ஸ்டோர் ரூமுக்குள் புகுந்துää தேடி ஒரு பழைய பொலித்தீன் பை எடுத்தான். ஒரு நைந்து போன கோணிச்சாக்கும் எடுத்தான். அழுக்கேறிக்கிடந்த ரஹ{வின் பழைய மழலைத் தலையணைகளையும் குளிர் காய உரிமட்டையும்ää தீப்பெட்டியும்ää சேகரித்தான்.

 

என்னத்துக்குங்க அதெல்லாம்..?

 

கமர்ஜானுக்குப் பதிலளிக்காமல்ää புன்னகைத்தபடியேää வெளியே சென்று  சில மரத்தடிகள் முறித்து வந்தான். மூலைக்குள்ளிருந்த கடப்பாரையையும் எடுத்துக் கொண்டான்.

 

என்ன இதெல்லாம்.. என்ன செய்யப் போறீங்க..?

 

நானும்   ப்பாவும் நாய்க்கி ஊடு கட்டப்பறம்.. ம்மா..

 

பாவம் கமர்.. நாய்..

 

ச்சீ.. மடத்தனமா உங்களுக்கு..புள்ளய நாய் கடிச்சிரும். டேய்..! நீ  ஞ்ச வாடா..

 

..ல்லலல்ல.. நான் வாப்பாவோட போறன்..

 

ச்சீ வாடா.. என்னங்க இது..ந்தா அடிக்கிற மளைக்க.. மடத்த..

 

குட்டி போட்ட நாய் பாவம்  கமர்..! சும்மா ஒரு மறைப்பு மாதிரி போட்டுட்டு வந்துர்ரன்.. அதுவும் ஒரு தாய்தானே.. உன்னப் போல.என்னது.. நான்  அந்த நாயப் போலவா..?

 

தாய்மையைச் சொன்னன். அது பொது.

 

நாய்  பச்ச நஜீஸ்.. என்னன்டான செய்ங்க.. கேக்கமாட்டீங்க.. புள்ளயத் தந்துட்டுப் போங்க..

 

டே.. ரஹ{!   நீ   ம்மாவோட இருந்துக்கடா.. மகன்..

 

ல்லப்பா..  ந..நான்.ää  ம்ம்மா.. நான்.. குட்டி எடுக்கணும்..

 

..ச்சீய்.. என்ன மடத்தனமா வேலையடா.. ந்த மளைக்க..ச்சீய்..

 

வாடா  ரஹ{  போவம்..

 

      ஒரு பிரசவக் கூடாரமைக்கும் பொருட்களுடன்ää தந்தையும் மகனும்  மழைக்குள்  இறங்கித்  தெருவை மெதுவாகக் கடந்தனர்.  ரஹகடையை விரித்துப் பிடித்தபடிää அன்ஸாரின்  பிடரியின் மீது அமர்ந்துää இரு கால்களையும்  தந்தையின் மார்பில் போட்டபடி வசதியாக உட்கார்ந்திருந்தான். நாயின் அவல ஓலத்தில் கவனமீர்க்கப்பட்ட தொடர்மாடியின்ää  சில  சிங்கள யன்னல்கள்  திறக்கப்பட்டடுää வேடிக்கை பார்த்தன.  ரஞ்சித் மஹத்தயாவின் ஆதரவுப் பார்வையும்ää செல்வி. சியாமளி பெரேராவின் நக்கல் பார்வையும்  கமர்ஜானின் பதட்டடமான பார்வையும்  அவர்கள் மீது மொய்த்தன. 

 

      இவற்றையிட்டுக் கவலைப்படாதää அன்ஸார்  ரஹ{வுடன்ää முன்ஜாக்கிரதையாகää கடப்பாரையைக் கயில் இறுக்கிப் பிடித்தவனாகத் தயார் நிலையாக  பாழ்வளவை நெருங்கினான். நாயைக் காணவில்லை. ஆனால்ää நான்கு குட்டிகளில் மூன்று மழைக்குள் கிடந்தன.  கண்விழிக்காமல்ää ஈர மண்ணில்ää தாயைத் தேடி  உழைந்தன. அவற்றின் வயிறுகள் உப்பிஉப்பித் தாழ்ந்தன. . சற்று நேரத்தில் இறந்தும் விடலாம்.. அன்சார் நாயைச் சுற்றுமுற்றும் கண்களால் தேடினான். நாய் எங்கேயும் போய் விடவில்லை.  வாயில் ஒரு பழுப்பு நிறக் குட்டியைக் கௌவியபடி சற்றுத் தூரத்தில்ää மழையில்லா ஒரு மறைவு தேடிப் போய்க்கொண்டிருந்தது. இவனைத் திரும்பிப் பார்க்கவில்லை.

 

      இந்தச் சந்தர்ப்பத்தைத் தவறவிடாத அன்ஸார்ää ரஹ{வை இறக்கி விட்டுää  விரைந்து செயலில் இறங்கினான். கடப்பாரையால். செங்கல் மற்றும்ää கூழாங்கற்களைக் கூட்டிää ஒரு அவசர மேடை.. மேலே கோணிச்சாக்கை விரித்தான்.  சில தடிக்கம்புகளை சுவரில் முட்டுக் கொடுத்துச் சாய்;த்து வைத்தான்.  அதன் மீது பொலித்தீன் சீலையை விரித்துக் கூரை.. அதற்கும் மேல் மறுபடி கோணிச்சாக்குத் தாவரம்..  அடிக்கடி நாயைத் திரும்பித் திரும்பிப் பார்த்தபடியேää  மேலதிக சொகுசு கருதிää அவனது பழைய முச்சக்கரவண்டியின்ää  றெக்ஸீன் உறையை விரித்து ஓட்டைகளுடன் கூடிய ஒரு அவசர மறைப்பு இட்டான்.

 

      ரஹபுல்லரித்துப் போய்ää தந்தையின் வீரசாகசங்களைப் பார்த்துக் கொண்டிருந்தான். தனதுää குட்டித் தலையணைகளை குட்டிகளுக்காக கூடாரத்துள் தன் பங்குக்குப் போட்டான். உள்ளே சென்றும் பார்த்தான்..

 

ப்பா.. இதுக்க மள பேயல்ல.. நெல்லம்..நெல்லம்.. என்றான்.

 

தம்பி ரஹ{.. நாய் வருதா ண்டு பாத்துக்க.. ந்தக் குட்டியளக் கொண்டு கூடாரத்துக்க போடுறன்.. செரியோ..?

 

செரிப்பா..

 

      அன்ஸார்ää கடப்பாரையால். குட்டிகளை அள்ளிää கூடாரத்தின்ää உள்ளேää தலையணைகளில். மெதுவாக வைத்தான். எல்லாம் முடிந்த சமயம் வானத்தில்ää பேரொலியாக இடி முழங்கியது.. மழை பலக்க ஆரம்;பித்தது. உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை.. அச்சமில்லை.. அச்சமென்பதில்லையே..

 

ப்பா.. டக்கெண்டு அந்த வெள்ளக் குட்டிய எடு;த்துட்டு வா..ப்பா..

 

அவசரமும்ää பதட்டமுமாகச் செய்த போதிலும்ää கூடாரவேலைகள் ஒரளவு திருப்தியாக அமைந்து விட்டது. அந்த அவசர அகதி முகாமினுள்ää நாயக் குட்டிகளுக்குக் கதகதப்பு ஏற்படுத்துவதற்காகää உரிமட்டைகளால்ää  நெருப்புத் தணலுடன் கூடிய  புகை மூட்டிவிட்டுத் திரும்ப-

கொண்டு போன குட்டியை இடையில் போட்டுவிட்டுää கொடூரப் பற்களுடன்ää பறந்து வந்தது  தாய்நாய்.

 

ப்பா.. ப்பா.. ந..நாய்.. வெருதுப்பா..

 

யன்னல் பக்கமிருந்தும்ää  கமர்ஜானின்  பதட்டமான  கூக்குரல் கேட்டது.

 

அல்லாவே.. ந..நாய் வெருதுங்க..

 

அன்சார் சட்டென  ரஹ{வைத் தூக்கித் தோளில் போட்டான். கையிலிருந்த கடப்பாரையை விடாதுபற்றிக் கொண்டு சற்று ஓடிக் குடையைப் பணித்துää  நாயை நோக்கி கடப்பாரையை வீசிப் பயம் காட்டினான்.. தனது எதிரியின் ஆயுதத்தைக் கண்ட நாய்ää சற்றுத் தயங்கிää ஊளையும்ää குரைப்புமாகää தனதுää ஆக்ரோசப் பாய்ச்சலைää ஒரு விநாடியி;ல் தவிர்த்தபடிää இவர்களை விட்டுவிட்டுää  குட்டிகளிடம் ஓடியது. இந்த அவகாசத்தில்ää அன்சார் ரஹ{வுடன்  இரண்டே பாய்ச்சலில்ää ஓடித் தனது முன் அறைக்குள் நுழைந்து விட்டான். முன்நடைபாதைக் கதவைச் சாத்திவிட்டான். நன்றாக.நனைந்திருந்தான். உள்ளேää கமர்ஜான் நின்று கொண்டிருந்த யன்னலால் வெளியே பார்த்தான்..

 

என்டல்லோ.. நெல்ல காலம்.. நாய் வந்த வரத்துல எனக்கு நெஞ்சுக்க  படபடபடபடண்டு.. 

 

என்று படபடத்தாள் கமர்ஜான். யன்னலால்ää பார்த்தபோதுää நாய்ää தன் குட்டிகளைக் காணாமையால் ஒருகணம் குழப்பமுற்று பரபரவென்று சுற்றுமுற்றும் தேடியது. புதிதாய் முளைத்திருந்த கூடாரத்தை சந்தேகத்துடன் பார்த்தது.  உள்ளிருந்து குட்டிகளின்  முனகல் சத்தம்ää கேட்டதும்ää ஒரே பாய்ச்சலில் விரைந்துட் புகுந்தது.  உள்ளேää குட்டித் தலையணைகளின் மீதுää  புகையின் கதகதப்புடன் குட்டிகள் ஆனந்தமாக   சொர்க்கம் அனுபவித்துக் கொண்டு உழல்வதை அதிசயத்துடன் பார்த்தது.  பின் பதைபதைப்படன் குட்டிகளை முகர்ந்து எண்ணிச் சரிபார்த்தது.

 

மறுபடி சட்டென்று வெளியே வந்தது. தூரத்தில் தான் கைவிட்டு வந்த  பழுப்புக் குட்டியின்ää  தீனமான அவலக்குரல் கேட்டது. சட்டென அதை நோக்கிப் பறந்து சென்றது. யன்னலைக் கடந்த போதுää தெரிந்த இவர்கள் மூவரின் முகங்களையம் விசித்திரமாகப் பார்த்தபடி பாய்ந்து மறைந்தது.  ஓடிச்சென்றுää பழுப்புக்குட்டியை கவ்வியது. மறுபடி அங்கிருந்து ஒரு தொங்கோட்டத்தில் ஓடி வந்தது. அதனால்  பிரசவ காயம் காரணமாக விரைந்து செயற்பட முடியாதிருந்தமை புரிந்தது. கூடாரத்துள் பழுப்புக்குட்டியடன் உட்புகுந்தது. பத்திரப்படுத்தியது. மீண்டும் தனது மக்களைச் சரிபார்த்தது.  மழைநீர் உட்புகாத கூடாரத்துள்ää hந்து கோணிச்சாக்கில் உருண்டு புரண்டுää தன்னைத் துவட்டியது. பின் புகைநெருப்பருகே நின்றது. தன் காயத்தை பின்புறமாக வளைந்து நக்கிச் சீர் செய்தது.  சற்று நிதானப்பட்ட பின்ää  மிக நிம்மதியுடன் குட்டிகளுக்குப் பால் கொடுக்க ஆரம்பித்ததது.  

 

யன்னலச் சாத்துங்க.. மள உரக்குது.. டே.. ரஹஞ்ச வாட.h.. பாரு தலயெல்லாம் ஒரே  ஈரம்..

 

ம்மா..ம்மா..! பாரேன்.. நாலு  டோக்கு.. குட்டிக்குட்டி டோக்குஹள்.. எனக்கொண்டு.. ப்பாக்கு ஒண்டு..

 

..ப்பாக்கு  வேற வேல ல்ல.. நாய் கடும் நஜீஸ்.!  தொட்ட கைய ஏழு தரம் கழுவனும்..

 

நான் நாயைத் தொடயில்ல கமர்ஜான்..

 

எதுக்கும் சோப் போட்டுக் கய்யக் களுவிட்டு வாங்க..

 

      மீண்டும் மழை பலத்தது. மின்னல் பளிச்சிட்டுப் பமுறுத்தியது. யன்னலூடேää சாரல் அடித்தது..கமர்ஜான் யன்னலை அடைத்துச் சாத்தியபோதுää பாழ்வளவுக் கூடாரத்துள்ää நாய்ää ஒரு வசந்தமாளிகை கிடைத்தாற் போன்ற  மகிழ்வும் நிம்மதியாகவும் குட்டிகளுக்குப் பால் கொடுத்துக் கொண்டிருந்ததை வெறுப்புடன் பார்த்தாள்.

 

என்ன மடத்தனமான வேலை.. கூரை ஒளுக வெச்சிருந்த பொலித்தீன் சீலய நாய்க்குக் குடுத்துட்டீங்க.. ச்சீ..  நாய்க்கி சரியான விசரு. கடிச்சிருந்தா..?

 

நடக்காத விசயத்தக் கதைக்காதீங்க கமர்ஜான்..

 

எ..எத்துன குட்டிப்பா அதுக்கு..அந்த வெள்ளக் குட்டி என்ட..

 

ஓ.! சாம்பல் நிறமொரு குட்டி..கருஞ் சாந்து நிறமொரு குட்டி.. பாம்பு நிறமொரு குட்டி.. வெள்ளைப் பாலின் நிறமொரு குட்டி..

 

ச்சீய்க்..! வவுத்தப் பெரட்டுது.. சொல்லாதீங்க..

 

எனக்கி வெள்ளக் குட்டி.. ப்பாட  கறுப்புக்குட்டி.. ம்மாட ப்ரௌன்...

 

டே ரஹ{.. உட்டுக்குள்ள குட்டியக்கிட்டியக் கொண்டு வந்துராதே.. செரி..செரி.. ஞ்சங்க.. பாண் வாங்கிட்டு வாங்க.. மள குறைஞ்சிட்டுது..

 

      அன்ஸார்ää  முகம்கைகால் கழுவினான். முச்சக்கர வண்டிச் சாவியை எடுத்தான்.  வாசலோடு ஒட்டி நிறுத்தியிருந்த தன் வாகனத்துட் புகுந்தான். முன் கண்ணாடியில் பாரதி படம்.. பெரிய தலைப்பாகையுடன்ää  இவனை உற்றுப் பார்த்தார். வண்ணங்கள் வேற்றுமைப்பட்டால்ää அதில்ää மானுடர் வேற்றுமையில்லை. எண்ணங்கள் செய்கைகள் எல்லாம்  இங்கு யாவருக்கு மொன்றெனக் காணீர்..!  ரஹ{வும்ää ஓடி வந்து ஒட்டோவினுள் ஏறää  தெருவில் வெள்ள நீருக்குள்  செலுத்தி வட்டமாகத் திருப்பிய போதுää எதிரே பாழ்வளவு வசந்தமாளிகைக்குள்  படுத்திருந்த நாய் உஷாராகி சற்று வெளியே தலைநீட்டிப் பார்த்தது. அதன் கண்களில் ஒலிவ் மலர்கள் பூத்திருந்தன.  சமாதானத்தின்ää வெள்ளைக் கொடிகள் பறந்தன.

 

ஏ..ய்.. டோக்கு..!  ஒண்ட வெள்ளக்குட்டியத் தெருவியா நேக்கு..?

 

அன்ஸார் சிரித்தபடியேää ஓட்டோவின் நீர்;த்துடைப்பை இயக்கிப் பாண் வாங்கச் சென்றான்.  ஆசிரி மாவத்தையிலிருக்கும்ää சுகததாச பேக்ஹவுஸ் என்ட் ஹோட்டலில்  பாண் வாங்கிய போதுää  இரவு மணி எட்டு. திடீரென ஞாபகத்தில் வந்த அந்த நாய்க்;காக மேலும் பரிதாபப்பட்டுää அநியாய அறுபது ரூபாய்கொடுத்து ஒரு இறைச்சிக் கொத்து ரொட்டியும் வாங்கினான்.  கமர்ஜான் அறிந்தால்ää ஏசுவாள்.  திரும்பி வந்து வீட்டருகே ஓட்டோவைத் திருப்பும் போதேää முன் விளக்கு வெளிச்சத்தைää வசந்தமாளிகைக்குள் பாய்ச்சினான். உள்ளேää குட்டிகள் யாவும் கதகதப்படன் தாயின் வயிற்றுக்குள் உழக்கிக் கொண்டிருந்தன. நாய் வெளிச்சத்தில்ää திடுக்கிட்டுää  மெதுவாக எழுந்து வெளியே வந்தது.  தன அளவை விட நீளமாக உடலை நீட்டி தினவுமுறித்தது. கண்களில்  கபில மாணிக்கக் கற்கள் தெரிந்தன.  அன்சார்ää  நாய்க்குத் தெரியுமாப் போல கொத்துரொட்டிப் பார்சலைப் போட்டான். பசியின் அகோரம் அது பாய்ந்து வந்த வேகத்தில் தெரிந்தது.  பட்டாசு வாணம் போல். வுpரைந்துää வந்துää கவ்வியெடுத்துத் திரும்பிப் புகுந்தது.

 

()

 

 

      அடுத்த நாள் குளிருக்குள் சோம்பலாக விடிந்தது.  மழை அதிசயமாக நின்றிருந்தது.  வானம் மூட்டமாய் இருந்தாலும் மழை வராது போலிருந்தது.  கடந்த இரவின் அடைமழை மாநகரத்தைக் குளம்குட்டையாகச் செய்திருந்தது.  என்றாலும் அன்ஸார் தொழிலுக்குத் தயாரானான். ரஹஅவனது முன்பள்ளிக்கு ஆயத்தமானான்.  கமர்ஜான் அவர்களை வழியனுப்பவுமென மூவரும் வெளியே வந்தனர்.  எதிரேää வசந்தமாளிகை தெளிவாகத் தெரிந்தது.

 

எப்படி நான் கட்டிய  நாய்மஹால்.. பாத்தீங்களா கமர்ஜான்...?

 

நாய்க்குத்தான் கட்டுவீங்க.. எனக்குக் கட்டமாட்டீங்க.. போங்க..

 

உன்னையே கட்டியிருக்கிறேனே.. அதை விடவா..?

 

ப்பா.. குட்டி..?

 

டேய் ரஹ{.. ஊட்டுக்குள்ள நாயைக்கீயைக்  கொண்டாந்திராதேடா..

 

      இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதுää எதிரேää  தனது வசந்தமாளிகைக்குள்ளிருந்து இவர்களைப் பார்த்தபடியே இருந்த அந்த நாய்  சட்டென எழுந்துää மின்னல் வேகத்தில்ää இவர்களை நோக்கிப் பாய்ந்து வந்தது.

 

..ஹ..ந்..ந..நா..ய்..நாய்..

 

      கமர்ஜான் அலறியபடியேää ரஹ{வைத் தூக்கää மூவரும்ää வீட்டுக்குள் ஒடத் திரும்ப முன்னரே நாய் நெருங்கி விட்டது. அது வந்த வேகத்தில்ää இனித் தப்ப முடியாப் பிரமிப்பில்ää மூவரும் விpதிர்வதிர்த்துப் போய் ஸ்தம்பித்து நிற்கää  விசித்திர தொனிpயில்அலறிய அந்த நாய்ää  திடீரென அன்ஸாரின் கால்களில் வந்து விழுந்தது.  விழுந்தவுடனேயே தன் நீளமான நாக்கை அவனது பாதங்களில் தேய்த்து கால்களுக்கிடையில் புகுந்துää சுற்றிச்சுற்றி முகர்ந்துää நக்கியது. முகத்தைத் தேய்;த்துத்தேய்த்து குறுகுறுவென்றுää மெல்லியதாக ஊளையிட்டது. அன்சாரும் கமர்ஜானும்ää வெலவெலத்துப் போய்ää

 

அடீய்..அடீய்..அடீய்.. என்று கத்தினர்.

 

இந்தச் சத்தத்தில் எச்சரிக்கையடைந்த நாய்ää சட்டென எழுந்துää மறுபடிää தனது வசந்தமாளிகைக்குள் பாய்ந்து சென்றது.  அது வெளிக்காட்டிய அதி தீவிரமான நன்றியுணர்ச்சியில் மூவரும் விக்கித்துப் போய் சில விநாடிகள் செயலற்று நின்றனர்.  எனினும் சற்றுச் சுதாகரித்துக் கொண்ட கமர்ஜான்ää கோபத்துடன் அன்ஸாரைப் பார்த்தபடிää ரஹ{வை வாரிக்கட்டிக் கொண்டுää அவனது நெஞ்சில் துப்பித்துப்பிää ஏதோ  சொல்லி ஓதி ஊதி விட்டாள்..

 

புள்ள தப்பிட்டான்.. நெல்ல காலம்.. மடத்தனமா ரோட்டுல  கெடந்த சொறி வள்ளாக்கு ஊடு கட்டிக் குடுத்து.. புள்ளக்கி கடிச்சிருந்தா என்னத்துக்காகும்..மடத்..

 

அது கடிக்க வெரயில்ல கமர்ஜான்..

 

கடிச்சிரிந்தா..என்ட நெஞ்சி காஞ்சி போச்சி.. ச்சேய்.. ரோட்டுல  கெடக்கிற  வள்ளாக்கு..

 

சரி சரி விடுங்க..

 

என்னத்துக்கு விடனம்.. புள்ளக்கி கடிச்சிட்..

 

வெள்ளக் குத்திய எனக்கித் தர வந்த  ன்ன..  ப்பா..?

 

வீட்டுத் தரையில் விரிக்கப்பட்டிருந்த  கம்பள விரிப்பு நாயினால்ää ஈரமுற்றுச் சேதப்பட்டிருந்தது.

 

()

 

      கமர்ஜானின் எதிர்ப்பு பலமாகவிருந்த போதிலும்ää அன்ஸார்ää ரஹ{ää வசந்தமாளிகை வாசியான அந்த நாய் ஆகியோருக்கிடையில்ää  அன்று தீவிரமாக ஆரம்ப்pத்த நட்பு  கடந்த ஒரு மாத காலமாக  மென்மேலும் வலுப்பெற்றே வந்தது. இறைச்சிää எலும்புத் துண்டுகள் விசயத்தில். அன்சார் ஒரு பாரி வள்ளலாக மாறியிருந்தான். மேலும்ää  அதன் பிரசவ வலி மற்றும் உபாதைகளுக்காகää  மிருக வைத்தியரை மினக்கெட்டுச் சந்தித்துää குளொரம் பெனிக்;கன்’ää வாங்கிää  சோற்றுக்குள் கலந்து கொடுத்தான்.  இறைச்சியை ஒஸ்பெக்ஸின் கலந்த நீரில் அவித்துக் கொடுத்தான்.  ரஹ{வும்ää தனது பிஸ்கட்’ää டிபிடிப்  பக்கெட்டுகளைக்  குட்டிகளுக்குத் தாரை வார்த்தான்.

 

      நாயும்ää இவர்களது  அன்புப் பலவீனத்தை நன்கு புரிந்து கொண்டது.  தான் வலிந்து உணவு தேடி வெளிக்கிட்டுச் செல்லாமல்ää வலியக் கிடைத்த சத்துமிக்க உணவுகளால்ää தன்னிறைவு கண்டுää சற்றுப் புஷ்டியாகிää தன் குட்டிகளுக்கு நிம்மதியாகப் பால் கொடுப்பதும்ää சும்மா அரைக்கண் மூடிப் படுப்பதுமாகää வசந்த மாளிகையில் பொழுதைக் கழித்துக் கொண்டிருந்தது. சிலசமயம்ää வீதியைக் கடந்துää இவர்களின்ää  வீட்டுää நடைபாதைக்கதவருகே வந்து எட்டிப் பார்த்தது. கமர்ஜானின்ää கத்திகம்பு வீசு பாவனையைக் கண்டுää பயப்படுவது போல் காட்டிக் கொண்டது.

 

இரண்டொரு வாரங்களின் பின் தனது சோம்பலை  முடிவுக்கு கொண்டு வந்து விட்டது. மிகுந்த உற்சாகத்துடன் அன்ஸாரின் குடும்பத்துக்குத் தனது சேவைகளை வழங்;கத் தொடங்கியது. தினமும்ää இரவுகளில்ää அன்சாரின் ஓட்டோவுக்குக் கீழ் படுத்து மிக நேர்த்தியாகக் காவலித்ததுää பகற்பொழுதுகளில்ää கமர்ஜான் பக்கத்தேää கடைகண்ணிகளுக்குச் செல்லும் போதெல்லாம்ää அவளை இரகசியமாகப் பின் தொடர்ந்து அவளுக்கும் தனது காவல் சேவையைத் தவறாது செய்தது. அவளைக் கண்டதுமேää தூரத்தில் நின்று கொண்டுää வாலையாட்டியது. எனினும் கமர்ஜான்ää  நாய்க்கு முகம் கொடுக்கவில்லை.  அவளுக்கு அதனைக் கண்டாலே குமட்டியது.  தினமும்ää ரஹ{வை ஏழு தடவை குளிப்பாட்டும்ää மேலதிக வேலையைச் சுமத்திய அந்நாயை தினமும் வைதாள்.  வாலைக் குழைத்து வரும் நாய்தான்.. அது மனிதருக்குத் தோழனடி பாப்பா.. என்று அன்சார் பாடினால்ää ஏசினாள். எனினும்ää அவளது அன்பு தனக்கு கிடைக்கவில்லையென்பதற்காக அது அலட்டிக் கொள்ளாமல்ää  தனது அன்பை வெளிப்படுத்தியே வந்தது.  பக்கத்தேயிருந்த ரஹ{வின் முன்பள்ளிக்குச் சென்று அவனைப் பாதுகாப்பாக அழைத்துவரும் வேலையையம்ää புதிதாகத்  தானாகவே பாரமெடுத்திருந்தது. இதனால்ää கமர்ஜானுக்கே  அந்த நேரம் சற்று ஓய்வும் கிடைத்தது. சிரமமும் குறைந்தது.  மாலைவேளைகளில்ää ரஹ{வோடுää பாழ்வளவுக்குள் பாய்ந்து பாய்ந்து விளையாட்டு;க் காட்டியது. எனினும்ää தனது  வெள்ளைக்குட்டியை ரஹதிருடி விடுவானோ என்றும் ஒரு கண் வைத்;துக்  கொண்டிருந்தது.  

 

பாழ்வளவின் வசந்தமாளிகையிலிருந்தாலும்ää மொத்தத்தில்ää அதுää அன்ஸாரின் குடும்பத்தில்ää வாக்காளர்அட்டைää அடையாள அட்டைää  மற்றும் பொலிஸ்பதிவுகள் இல்லாதää வெளி உறுப்பினராக சுய பிரகடனம் செய்து கொண்டது.  பாழ்வளவுக்குள் வந்து குவியும்ää தொடர்மாடிவீடுகளின்ää உணவுமீதிகளை அது ஏறெடுத்தும் பார்க்கவில்லை. நல்ல உணவுக்கும்ää  நன்றி உணர்வுக்கும் அது அன்ஸார் வீட்டினரையேää தேர்ந்தெடுத்திருந்தது. 

           

அன்சார்  தனது தொழில் முடிந்து வரத் தாமதமானால்ää  கமர்ஜானை விடவும்ää அதிகமாகக் கவலைப்பட்டுää  தனது தங்கமான எஜமானனுக்காகää தெருச் சந்தியில் போய்க் காத்திருந்தது. தனது எசமான விசுவாசத்தை தனது ஒவ்வவொரு  செயற்பாடுகளிலும்ää திட்டமாகவும்ää உச்ச அளவிலும்ää  காண்பித்தது.

 

எல்லாச் செயற்பாடுகளுக்கும்ää ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் காலம் விரைவிலேயே வந்தது.

 

()

 

      எங்கு பார்த்தாலும்ää நாட்டில்ää குண்டுகள் வெடித்துக் கொண்டிருந்த காலப்பகுதியில் ஒரு நாள் வெள்ளிக்கிழமை  அன்ஸார்ää ஜும்ஆத் தொழுகைக்குத் தயாராகி ஓட்டோவை வெளியே எடுத்தான்.  தெஹிவெல பெரியபள்ளிவாசலுக்குச் செல்ல வேண்டும். முதலில்ää துங்மல்ஹந்திக்குச் சென்று சுற்றுவட்டப் பாதை எடுத்தால்ää சரணங்கர மாவத்தையில் இலகுவவாக ஏறி விடலாம் என்று கணக்கிட்டுää வேகமாகச் சென்றான். நேரம் நண்பகல் 12.15 மணியாகியிருந்தது.சற்று மழை மூட்டமாகவிருந்தாலும்ää  தலைநகரெங்கும் வாகனää மனித நெரிசலுக்குக் குறைவில்லை.

 

      அவன் துங்மல்ஹந்தியை நெருங்கியதும்ää பாதையின் குறுக்கேää ஒரு பெண் கைநீட்டினாள். அழைத்தாள்.  இன்று வெள்ளிக்கிழமை  சுய விடுமுறையாதலால்ää அன்சார் தொழில் புரிவதில்லை. என்றாலும்ää போகிற வழியில் வலியவரும்ää சவாரியை விடவும் விரும்பாதுää ஓட்டோவை அப்பெண்ணருகேää நிறுத்தினான். கர்ப்பிணி போல் தெரிந்ததுää பதட்டமான கண்களால்ää இவனைப் பார்த்தாள்.

 

அநே..நாநா.! எனக்கு சரணங்கர மாவத்த பக்கம் போகணும். கீயத..?

என்று தமிழும்ää சிங்களமும் கலந்து கேட்டாள்.  பரவாயில்லை.. போகிற வழிதான். சுளையாக 80 ரூபாவை ஏன் விடுவான்..?

 

ரைற்..! ஏறுங்க நோனா.. அசுவய் தென்ன.. என்றான்.  அச்சமயம்ää ஒட்டோவின் பின்னிருக்கையிலிருந்து யாரோ முனகுவது போல் கேட்டது. தன்னைப் பிராண்டுவது போலுமிருக்கவேää அன்சார் அதிர்ச்சியுடன் பின்னால் திரும்பினான்.  புpன்னிருக்கiயில்ää ஒய்யாரமாகச் சாய்ந்திருந்த அவனது (?) நாய்ää முனகியபடியே எழுந்தது. வ்வ்வ்வுள்க் கென்று  குரைத்து விட்டுää அன்ஸாரின் சட்டையைப் பிராண்டியது. உள்ளேற முயன்ற அப்பெண்ää இந்த விசித்திரப் பிராணிப் பிரயாணியைக் கண்டுää பயந்துää

 

அநே..வள்ளோ..நா..ய்..

 

என்று சொல்லிச் சட்டென்று பயத்துடன் பின் வாங்கினாள். ஆனால்ää  நாய் அப்பெண்ணை நோக்கி பயங்கரமாகப் பல்லைக் காட்டி வ்வுள்க்..வ்வுள்க். கென்று சின்னதாகக் குரைத்தது. அதன் கண்களில்ää கொடூரமான விரோதம் தெரிந்தது. அன்சார் கோபமுற்றுää அதற்கு நல்ல தோதுவாக ஒரு அடி கொடுப்பதற்கு வசதியாகää ஒரு கம்பையோää கல்லையோ  பரபரப்புடன் தேடினான். ஒன்றும் கிடைக்காமையால்ää தானே சட்டென இறங்கி பின்பக்கமாக வந்துää தனது வலது காலால் ஓங்கி ஒரு உதை கொடுத்தான்.  ள்ளொக்ள்ள்ளொள். ளென்று கத்திய நாய் சட்டென ஓட்டோவை விட்டும் வெளியே பாய்ந்தது. அன்சார் உள்ளுரப் பொங்கிய ஆத்திரத்தை மறைத்துக் கொண்டு சிரித்தவனாகää

 

ஹரி.. ஏறுங்க நோனா.. நிக்கங் அபே வள்ளக்.. என்றான்..

அப்பெண் சற்றுப் பயம் நீங்கி மறுபடி ஓட்டோவினுள் ஏற முயலää  நாய்ää வன்மமாக உறுமிக் கொண்டுää  ஆக்ரோஷமாக குரைத்தடியே பாய்ந்து வந்தது. அப்பெண்ணிண் மீதுää பாயத் தயாராகி முன்னங்கால்களை உயர்த்தியது.  அவள் வீரிட்டு அலறää அன்ஸார் சட்டென குறுக்கால் புகுந்துää நாயின் எதிரே தன்  கால்களை உயர்த்தி ஓங்கி உதைத்தான். ள்ள்வ்வ்வ்வவூவ்வ்வ்  என்று வலியுடன் ஊளையிட்ட நாய்ää உதையின் விசையினால்ää சுருண்டு தெருவின்  மறுபக்கத்துக்கு  இழுபட்;டுச் சென்றது.  இந்தக் களேபரங்களால்ää தெருவில் சென்று கொண்டிருந்த வாகனதாரிகளும்ää பாதசாரிகளும் பார்த்து நகைத்தனர். அன்ஸார் வெட்கமுற்றுää

 

தந் ஹரி..ஹரி.. ஏறுங்க நோனா.. என்றான்.

 

அவள் கொஞ்சம் தயங்கினாள். அச்சமயம்ää தெருவின் நடைபாதைப் பக்கமிருந்துää  நாய் மறுபடியும்ää ஒரு அசுரப் பாய்ச்சலுக்குத் தயாராகிää தூரத்தே நின்று கொண்டுää வ்வூவ்க் வ்வ்வூக் கென்று பலமாகக் குரைத்தது. ஓடி வரத் தயாராகி முன்னங்கால்களில் குனிந்து  மண்ணைப் பிராண்டியது. இப்பெண் ஏறினால்ää பாய்ந்து வரத் தயாரானது.  இச்சங்கடமும்ää பீதியானதுமான நிலையை எப்படிச் சமாளிப்பதென்று தெரியவில்லை. அடுத்த கணத்தில்ää அப்பெண்ää

 

அநேääஉங்கட ஓட்டோ வேணாம்..  என்று இவனிடம் சொல்லி விட்டுää விரைவாக வீதியின் மறுபக்கத்தே வந்து கொண்டிருந்தää இன்னொரு ஓட்டோவைக் கூப்பிட்டுää ஓடிச் சென்று அதனுள் ஏறினாள்.

     

 

அன்ஸார்ää மகா ஆத்திரமாகää நாயைப் பார்த்தான். வசதியாக ஒரு அடி கொடுக்க மனம் எண்ணியது. வலிய வந்த உழைப்பும் போய்..ää தொழுகைக்கான ஆடையும் அசுத்தமாகிää  ஓட்டோவை வேறு கழுவ வேண்டும்.. நாய் சற்றுத் தூரத்தில் அதே நிலையில் நின்று கொண்டுää அன்ஸாரையும்ää  மற்ற ஓட்டோவில் ஏறிக் கொண்டிருந்த அப்பெண்ணையும்ää மாறிமாறிப் பார்த்துக் கொண்டிருந்தது. அதன் கண்கள் நிதானத்தில் இல்லை என்று புரிந்தது. நாக்கை அளவுக்கதிகமாக நீட்டிக் காற்று வாங்கி மூச்சிரைத்தது. ச்சீ.. நாயே.. இங்கேயே உன்னை விட்டுப் போறேன்.. நடந்தே வீட்ட வா.. உன்னைக் கவனித்துக் கொள்கிறேன்.. என்று மனதுக்குள் கறுவிக் கொண்டு அன்ஸார் தன் ஓட்டோவைத் திருப்பினான்.

 

இப்போதுää அப்பெண் ஏறிய ஓட்டோ இவனுக்கு முன்னால்ää  இருபதடி தூரத்தில் போய்க் கொண்டிருந்தது.  அன்ஸார் தனது  ஓட்டோவை மெதுவாக அதன் பிpன்னால் ஓட்டிக் கொண்டிருந்த போதுää  சட்டென ஒரு விசித்திரமான  காட்சியைக்  கண்டான்.. அந்த  நாய்ää வெகு வேகமாக அவனது ஓட்டோவை முந்தி ஓடி வந்தது. அன்ஸார் கோபத்துடன் தனது வேகத்தை அதிகப்படுத்தினான். ஆயினும் நாயும் அதே வேகத்தில் ஈடு கொடுத்து பாய்ந்து பாய்ந்து ஓடி வந்து கொண்டும்ää கிடைத்த வாகன இடைவெளிகளில் நுழைந்து இவனது ஓட்டோவுக்கு முன் வந்து மறிப்பதுமாக இருந்தது. இப்படி வாகன நெரிசலைப் பயன்படுத்தி மூன்று நான்;கு தடவைகள்ää ஓட்டோவின் முன் வந்து வந்து ஊளையிட்டபடியேää  மறித்தது. இவனைப் போக அனுமதிப்பதில்லை என்று தானாகவே முடிவு செய்து கொண்டாற் போலää தடுத்தது. எதிர்ப்புறமிருந்து வேகமாக சில இராணுவ வாகனங்கள் வந்து கொண்டிருந்தன. அன்ஸார் நாய்ää  அருகே வரும் போதெல்லாம்ää  முன் சக்கரத்தைத் திருப்பித்திருப்பி  மோதிவிடுமாப் போல்ää  பயமுறுத்தினாலும்ää நாய் தனது மறியல் போராட்டத்தை  விடவில்லை.  இப்போதுää முன் ஓட்டோவில் சென்று கொண்டிருந்த அப்பெண் திரும்பி இவனையும்ää இவனது நாயையும்  ஆச்சரியத்துடன் பார்ப்பது தெரிந்தது. அடுத்த கணத்தில் என்ன நடந்ததென்று தெரியவில்லை.

 

      திடீரென்றுää  அந்த முச்சக்கர வண்டியிலிருந்துää அது ஓடிக் கொண்டிருக்கும் போதேää  அப்பெண்  எதுவிதமான முன் யோசனையுமின்றிää  வெளியே வீதியில் அபாயகரமாகக் குதித்தாள்.   நடுவீதியில் விழுந்தாள். அதேகணத்தில் எழுந்தாள். அடுத்த விநாடிää எதிரே வந்து கொண்டிருந்த  இராணுவ வாகனங்களில் சிக்கி விடுவாளோ என்று நினைத்துப் பயந்த அதே கணத்தில்ää  அவள் அந்த இராணுவ வாகனத் தொடரை நோக்கித் தானாகவேää  பாய்வது தெரிந்... ஒரு மகா பயங்கரமாக பேரிடி போலொரு ஒலியும்ää திடீரெனத் தீப்பிளம்புமும்   எழுந்தன. 

 

அதே கணத்தில்ää   நாயும் அன்சாரின் ஓட்டோவினுள் பாய்ந்து அவனது மடியில் வந்து விழுந்தது.  மறுகணத்தில் அன்சாரின் ஓட்டோ தலைகுப்புறக் கவிழ்ந்தது.  அவனும்ää ஏதோ ஒரு தள்ளுகைக்குள் அகப்பட்டு  திடீரென விசுக்கி வெளியே எறியப்பட்டான்.  நடைபாதையினருகே  சுய கட்டுப்பாடின்றி தான் இழுபட்டுச் செல்வதை கடைசியாக உணர்ந்தான். தலையில் விண்ணென்று எதுவோ இடித்தது..  ஒருகணக் குழப்ப நிலையின் பின் தான் ஒரு குண்டு வெடிப்பில் அகப்பட்டுவிட்டோம் என்றும்ää  இன்னும் உயிருடன்தான் இருப்பதும் உறைத்தது. பின்பக்கமாக முதுகில்ää தார்வீதி உருகி ஒட்டிக் கொண்டு தீய்த்தது. உடலில் ஆங்காங்கே இரத்தக்கறைகள் தெரிந்தன.  சமாளித்து விரைவாக எழுந்தான்.  சனங்கள் பதறியடித்து ஓடினர்.. துவக்கு வெடியோசைகள் காதைப் பிளந்தன.. வாகனங்கள் அலறி ஓடின.. அல்லோல கல்லோலக் குழப்பத்தில்ää அன்சார் திசை தப்பி எங்கோ கூட்டத்தோடு ஓடினான். ஓட முடியாது விழுந்தான் கொஞ்ச நேரம் அப்படியே ஒரு கடைவாசலில் உருண்டு ஒதுங்கிக் கிடந்தான்..

 

கமர்ஜா..ன்.. ரஹ{.. ரஹ{..  தாகத்தால் நா வரண்டு தொண்டை  ஒட்டிப் போய்ää பேசவும் திராணியற்றுää உதவவும்  யாருமற்றுக் கிடந்தான். அப்படியே பதினைந்து நிமிடங்கள் கிடந்தான்.  மென்மேலும்ää குழப்பமான குரல்களும்ää பொலிஸ்ää தீயணைää அம்பியுலன்ஸ்ää இராணுவääவண்டிகளின் சத்தங்கள்.. பரபரப்புகள் ஊடே மறுபடியும் உணர்வு மங்கிக் கொண்டிருந்த போதுää  யாரோ  தனது முகத்தை ஈரத் துண்pயால்  முனகியபடியேää துடைப்பதை உணர்ந்தான். கமர்ஜான் வந்துவிட்டாளா..நன்றாக துடைத்து விட்ட பின் சற்றுத் தெம்பு வந்து கண்களைத் திறந்து பார்த்தான். அவனது நாய்தான்.! தன் நீண்ட நாக்கினால்ää அன்சாரின் முகத்தை  நக்கி ஈரப்படுத்தியது..  தன் எஜமான் கண் விழித்ததும் அதீத மகிழ்ச்சியில்ää தனது முன்னங்கால்களை மடித்து அவனது கால்களில் விழுந்து மறுபடிமறுபடி நக்கி வாலை வெகு துரிதமாக ஆட்டிக் கொண்டிருந்தது.. 

 

ஓ..! அல்லாவே.!  ஆஹாää என்னருமை.. நாயே..! தற்கொலைப்போராளிப் பெண்ணை எனது ஓட்டோவில் ஏற விடாமல் தடுத்து என்னைக்  காப்பாற்றி நாயே...! 

 

இங்கிதனை நான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன்..?  அன்சார் நாயின் முகத்தைப் பார்க்கவே வெட்கப்;பட்டான். ஐயறிவுப் பிராணியான அதன் பேரறிவின் முன்னால்ää ஆறறிவுப் பிரயாணியாகிய தனது சிற்றறிவு தோற்றுப் போன விந்தையையும்ää தன் எஜமானனைக் காப்பாற்றும் முயற்சியில் அது கடைசி  மட்டும் போராடிவிட்டுää முதுகில் சிற்சில காயங்களுடன்ää  இன்னமும் காவலிருப்பதையும்... அன்ஸாரின் கண்களில் வழிந்த அந்த நன்றிக் கண்ணீரால்ää நாயின் முகம் நனைந்தது. ஆனால்ää  அதுவோää  எவ்வித எதிர்பார்ப்புமின்றி தனது எஜமானனின் கால்களை நக்கிக் கொடுத்த படியே காலடியில் படுத்துக் கொண்டு இறுதியாக மூச்சிரைத்துக் கொண்டிருந்தது.0

(தினக்குரல்.2002)