Saturday, March 12, 2022

ஒரு துளிச் சுனாமி

 ஒரு துளிச் சுனாமி

 தோணாவடிக் கிராமத்திற்கு நான் இடமாற்றம் பெற்று வந்துää இன்றோடு 912 நாட்களாகியிருந்தன. அதாவது இரண்டரை வருடங்கள். இன்றோ நாளையோ என் பணி முடிந்து மறுபடி கொழும்பு தலைமையகத்திற்கு செல்லத் தயாராகவிருந்தேன். தோணாடிக் கிராமத்தை விட்டும் பிரிவதென்பது என்னோடிருந்த என் மனைவிக்கும்ää என் ஐந்து வயது மகள்  ஷேபி க்கும்ää அவளது  மியாமி  என்ற செல்லப் பூனைக்குட்டிக்கும்தான் சரியான கவலையாகவிருந்தது.

 

என்ன ஒரு அழகான கடலோரக் கிராமம் இது. வங்காள விரிகுடாப் பெருங்கடலின் விரிந்த பரப்பின் ஒரு முனை தொட்டு நிற்கும் தோணாவடிக் கிராமத்தின் கால்கiளை எப்போதும் ஓயாமற் கழுவி மீளும் அலைகள்.. மஞ்சட் பரப்பாக கண்ணாடிப் பளபளப்பாக நீளும் வெண்மணற் பரப்பு. கடல் முனைதள்ளும் இயற்கையான தோணாக்கால்வாய்.. அதில்தரிக்கும் சிலபடகுகள்.. மேற்கேää மீனவர்வாடிகள்... குடிசைகள்... மனிதர்கள்.... பெண்களின் சிறுசந்தை..  ஐந்தாறுகடைகள்.. வலப்பக்கமாக அரசாங்கஅ.மு.க.பாடசாலை.. மூன்றே ஆசிரியர்கள்.. மிகச்சிறிதானää ‘பெரியபள்ளிவாசல்’.. மையித்துப்பிட்டி... தொடர்ந்து அடர்இருளாக.. பச்சையிருட்டாகää அடர்ந்திருக்கும் தென்னந்Nதோப்புää... ஊடறுக்கும்ää சிலீர்காற்று... வலைக்கும்பங்கள்... சிப்பம்கள்... மிதலைனகள்... மீன்வீச்சம்... கருவாட்டுமணம்... தூரத்தேää ஒற்றைக்; கட்டடிடத்தில்  கிராமிய வைத்தியசாலை...  எப்போதாவது அங்கு (மீனுக்காக) தலை காட்டும் அப்போதிக்கரி ஐயா...

 

கிழக்குப்புறமாக  மண்மலை அதிசயம்.. கால்கள் புதையப்புதைய மேலேறிச் செல்லும் 66 அடி உயர மணல்மேடு. முழு உயரத்திற்கும் ஏறுவதானால் மூச்சு முட்டும். ஏறிப் பார்த்திருக்கிறோம். தென்னைமரங்கள் கால்களுக்குக் கீழே தெரியும். கிராமம் முழுவதும் ஒரு வரைபடம் போல் தெரியும். தூரத்துக் கல்முனை நகரத்தின்  ~டெலிகொம்| அன்டெனா பக்கத்தில் தெரியும்.

 

      மணல் மேட்டின் சரிவில் புவியீர்ப்பு உபயத்தில் பத்தே நிமிடத்தில் முழங்கால் புதையச் சறுக்கி இறங்கினால்  செமிலத்துவின் சில்லறைக்கடையுடனான குடிசை வீடு. வீட்டில் செமிலத்துவும்ää அவளதுää தகப்பன் முகமறியாத நான்கு வயதான ஜமீலா என்ற மகளும் வாழ்கிறார்கள். தகப்பன் முகமறியாத என்றால்  இவள் பிறக்கும் போது  செமிலத்துவின் கணவன் சாரதி வேலைக்காகச் சவுதி சென்றுவிட்டிருந்தான்.. நான்கு வருடங்க ளாகிவிட்டன..தனக்குப் பிறந்த குழந்தையின் முகத்தை இன்னமும் நேரில் காணாத அப்பாவி... புகைப்படத்தில்  மட்டுமே தன் மகளைக் கண்டிருக்கிறான்... தொலைபேசியில் மட்டுமே தன் மகளின் மழலைக் குரலைக் கேட்டிருக்கிறான்...  இனி விரைவில் திரும்பவிருக்கிறான்.....இந்த ஜமீலா என் மகள் ஷேபியின் விளையாட்டுத் தோழி.. அவளுக்குத் தன் ~மியாமி| என்ற வளர்ப்புப் பூனைக் குட்டியை அன்பளிப்புச் செய்த பரோபகாரி..... அவளது தாய் செமிலத்து என் மனைவியின் வேலைக்காரத் தோழி..

                                    ()

 

      தோணாவடிக்கிராமத்தின் வலது கரையில் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டிருந்த  படகுத்துறை ஒன்றுக்காக கடல் சமிக்ஞை விளக்குக் கோபுரம் ஒன்றினை அமைத்தது முடித்ததே என் பணி... இருநூறு கடல் மைல்களுக்கப்பால்ää தெரியக் கூடியவாறு இக் கோபுரம் அமைக்கப்பட்டிருந்தது. கோபுரத்தின் உச்சியில் நான் அமைத்திருந்த  செம்மஞ்சள் சமிக்ஞை விளக்கு இரவில் பளீர்பளீரென ஒளிச் சிமிட்டிச் சிமிட்டிய அதிசயத்தில் கிராமமே என்னை வியந்து பார்த்தது.

 

      இரண்டரை வருடகால சிரமமிக்க பணி. எல்லாம் சரியாக நடந்தேறி விட்டன.  பிரதேச எந்திரி திரு. ஜயலத் கொடித்துவக்கு விடம் அலுவலக ரீதியாக  கடமைப் பொறுப்புக் கொடுத்தால்ää சரி. அவர் வரமட்டும்ää சும்மா கடற்கரையில் உலவிக் காலத்தைக் கழித்துக் கொண்டிருந்தேன்.. கொழும்புக்குச் செல்லும் ஆயத்த வேலைகளைச் செய்துகொண்டிருந்த மனைவிக்கு உதவிக் கொண்டிருந்தேன். பிரியாவிடை தர வரும் கிராமத்து மக்களிடம் வேடிக்கையாகப் பேசிக் கொண்டும்ää விருந்தோம்பிக் கொண்டும்ää ஷேபியாää ஜமீலா மற்றும் மியாமியுடனும் விளையாடிக் கொண்டுமிருந்தேன்..

 

      கடைசிமுறையாகக் கிராமத்தைச் சில புகைப்படங்கள் எடுப்பதற்காக மனைவியுடனும்ää ஷேபியுடனும்ääமியாமி முன் தொடர மண்மலை உச்சிக்கு ஏறினோம்... இன்றைய இராச்சாப்பாட்டைக் கூட மண்மலை உச்சியில்தான் சாப்பிடää மனைவி ஆயத்த ஐடியாக்கள் செய்திருந்தாள். ஆறுதலாகவும்ää  புகைப்படங்கள் எடுத்தும்ää மண்மலை உச்சியை சென்றடைய நாற்பது நிமிடங்காளாகின. மண்மலை உச்சி நோக்கியும்ää அதல சரிவு நோக்கியும்ää படமெடுத்த போதெல்லாம் மனைவி கூட புதுப்புது அழகில் தெரிந்தாள்... மண்மலை உசச்சியில் எங்களைக் கண்டதுமே அடிவாரக் குடிசைகளிலிருந்து கிராமத்து சனங்கள் சிரித்துக் கையசைத்தனர். எல்லோரும் ஓரடிக் குள்ளர்களாகத் தெரிந்தனர்.. ஷேபியா  கீழ்நோக்கி உரத்த குரலில்ää

 

 ஜம்ம்ம்மீஈஈஈலாhஆஆ..

 

என்றுவீரிட்டுக்கூப்பிடääஅதுஅவர்களுக்குக்கேட்டிருக்காதுஆயினும்ää சட்டென ஜமீலா தென்பட்டாள்.. எங்களைக் கண்டுவிட்டாள். உடன் பரபரப்பாக அவளது தாயைக் கூப்பிட்டு ஏதோ சொன்னாள்... பின் ஓடி வந்து மணல் மேட்டில் ஏறி எங்களை நோக்கி ஓடி வந்தாள்..அவள் விழுந்துவிடுவாளோஎன்றுஎங்களுக்கு பயமாகவிருந்தாலும்ää வெகு அநாயாசமாக மேல் நோக்கி ஓடி வந்தாள்..வரும் போதே ;சேபியா...சேபியா...என்று கூப்பிட்டுக் கொண்டே வந்தாள்..உச்சியை வந்தடைந்தாள்.. மூச்சிரைத்ததாள்.. மனைவி  கொடுத்த சொக்கிளேற்றை  சாப்பிட்டுக் கொண்டே பிள்ளளைகள் இருவரும்ää மியாமியுடன் விளையாட ஆரம்பித்தனர்.. நானும் மனைவியும்ää சாமான்களை பரப்பிவைத்து உட்கார்ந்து கொண்டோம்...

 

மண்மலைஉச்சியிலிருந்துஎத்தனைமுறைபார்த்தாலும்ääஅலுக்காதääஅற்புதக்காட்சியில்இலியித்திருந்தோம். மாலைச் சூரிய மஞ்சள் ஒளி நடுக்கடலில் பட்டுப்படர்ந்துää அலைகளின் தளம்பலில் தங்க ஜரிகைச் சேலையாக அசைவதும்ää கரையில் மஞ்சள் வெயிலும்ää நீலக் கடலும் வெண்மை நுரையும் கலந்துää இனம் புரியா வர்ணத்தில் ஆக்ரோஷ அலைப்பாம்பாக  உருவெடுத்துச் சீறி உயரே எழுந்துää மணற்றரையிற் கொத்திப் பிளந்து படர்ந்து மண்மலை மீதேற முயன்றுää  மறுபடி பின் வாங்குவதும்ää ;அலை முழங்கும் கடல் படைத்து அழகு பார்ப்பவன்.. அலையின் மீதும்ää மலையின் மீதும் ஆட்சி செய்பவனின்  வல்லமையைச் சந்தேகமறப் புரிய வைக்;கும் அற்புதக் காட்சி அது......

 

 பிள்ளைகள்.. ஓடிவாங்க...ஷேபிக்குட்டி..! பிஸ்கட்சாப்பிடுங்க.. ந்தா..ஜமீலா...                                       

  என்னங்க பிளாஸக்குல ரீ இருக்கு குடிங்க

 

மனைவியின் குரலில் மோனம் கலைந்தேன்.. பி;ள்ளைகள் தேநீர் அருந்தி சாப்பிட்டு முடிக்கும் போது ää  ஜமீலா என்னைப் பார்த்துää சிக்குப் பிடித்த தலையை ஆட்டியபடிää கண்களை அகல விரித்துää மூச்சிரைக்கää

 

இஞ்சினர்மாமா..இஞ்சினிர்மாமா..ம்மச்சிசெல்லின..வப்பச்சிவாற..சட்டசாமான்ääகுச்செருப்புääகிளிப்புக் கொண்டாரயாம்.. ஒட்டகயம் கொண்டாரயாம்.. ஙா.....டெலிவன் செஞ்ச.. ம்மச்சி கதச்ச.. வப்பச்சி என்கூட அல்லோ..அலோண்டு சென்னயே...என்றாள் மீனவ மழலைத் தமிழில்..

 

என்னங்க சொல்லுது ந்தப் பிள்ள..?”  மனைவி சிரித்தாள்.

 

என்ன டெடா சொல்றா ஜமிலா...?”

 

அது என்னண்டால்ää ஜமீலாட வாப்பா சவுதியில இருக்கிறார்தானே.. அவர் ஊர் வாராறாம்..இவளுக்குச் சட்டைääசாமான்ää குதிச்செருப்புää ஒட்டகம் எல்லாம் கொண்டு வாராராம்.. சவுதியிலயிருந்து டெலிபோனுல.. கதச்சவராம். இவளும் ஹலோ ஹலோ ண்டு சொன்னவளாம்.....

 

என்று அதனை விரிவுரை செய்தேன்..அப்போது  ;ஜமீலா...ஜமீலா  என்று கூப்பிட்டபடியேää  அவளது தாய் செமிலத்து மேலேறி வந்தாள்..

 

ம்மாச்சி...ம்மாச்சி..என்று ஜமீலா குதித்தாள்..

 

மேலேறி வந்த செமிலத்துää

 

புள்ளே..கனநேரமா வந்த...?”  என்ற கேள்வியுடன் ஆரம்பித்துää -நாளைக்கி ஊருட்டு மாறிப் போறீங்களமே.. அழிச்சி வெருவீங்களா..நீங்க போனா வேள் செமிலா எப்பிடித்தான் இரிக்கப் போறாளோ.. ஒரே ஊட்ட சேவி..சேவி யெண்டு ஒங்கட  மகள்ள கததான் அவளுக்கு.. எப்பிடித்தான் பிரிஞ்சிரிக்கப் போறாளோ..என்றாள்.

 

அவள்ட வாப்பா எப்ப வாறாராம்?”  கேட்டாள் மனைவி..

 

மச்சான் ப்பதான் டெலிவன் எடுத்த.. இருவத்தஞ்சாம் தியதி வாராராம்..  என்று கிராமத்து நாணத்துடன் சொன்ன செமிலத்துää மறுபடியும்ää   -மச்சான் கலியானம் கட்டி எட்டு மாசம்தான் இருந்தாஹ. ரைவர் வேல கெடச்சி சவுதிக்கிப் பெய்த்தாஹ.. நாலு வரிசமாச்சி..இவள் பொறந்ததும் அவஹளுக்குத் தெரியா..ன்னம் புள்ளட மொகம்தெரியா..போட்டோதான் தெரியிம்..ன்னரம் பார்க்கத் துடிச்சிட்டு இரிப்பாஹ..   என்hறாள் ஏக்கமாக.

 

திருமணமாகி எட்டே மதாங்கள் இருந்த பின் செமிலத்துவின் கணவன் சவுதி போய் நான்கு வருடங்களாகி விட்டன.. தனக்குப் பிறந்த குழந்தையின் முகமே தெரியாது. புகைப்படத்தில் மட்டுமே கண்டிருககிறான்.. தொலைபேசி வசதி அதிகமாக இல்லாத இந்தக் கிராமத்தில் தன் மகளின் குரலை இரண்டொரு தடவைகள் மட்டுமேää கேட்டு மிருக் கிறான்..இளம்மனைவியையும்ää ஒரே மகளையும் பிரிந்து தூரமிக்கää துயரமிக்க பாலைவன நாட்களை எண்ணிக் கொண்டிருந்தாகி விட்டது.. இனி வந்துவிடுவான்.. ஆயினும் நான் அவனைப் பார்க்க முடியுமோ என்னவோ..நாளைக்குத் தவறினால்ää அவன் வருமுன்னரே நான் மாற்றலாகிப் போய் விடுவேன். ஷேபியின்ää இந்த துன்பியல்   பிரிவைää ஜமீலா தாங்க மாட்டாள்தான்.  ஆயினும் இரண்டொரு நாட்களில் தகப்பன் வந்து விடுவான்தானே..

                                       

கணவன்திரும்பும்கனவுகளுடன் ஒரே மகள் ஜமீலாவுடன் செமிலத்து வாழ்ந்து வரும் தன்கதையை என் மனைவியுடன்ää முழுää ஈடுபாட்டுடன ;பேசிக்கொண் டிருந்தாள். நான் அவர்களைப் படமெடுத்தேன்..மியாமியைத் தனியாக ஒரு படம் எடுத்தேன். அச்சமயம் ஒரு கிராமத்து ஆள் அவசரமாக மண்மலையேறி வந்து கொண்டிருந்தான்.

 

சேர்...சேர்..என்று கூப்பிட்டபடியே வந்து சேர்ந்தான்.

 

என்னது..நீயா? ஏன்.?”

 

 

ஓம். சேர்..தந்தி ஒண்டு வந்திரிக்கி சேர்..

 

தந்தியைப் பிரித்தேன். சரிதான்.. நாளை வரும் பிரதேச எந்திரி திரு. ஜயலத் கொடித்துவக்குவிடம்  பொறுப்பை ஒப்புக்கொடுத்துவிட்டுத் தலைமையகத்திற்குச் செல்லும் உத்தரவு வந்திருந்தது.

()

 

      நாங்கள் கொழும்புக்குத் திரும்பி மறுபடி தலைமையகத்தில் கடமை பொறுப்பேற்று பழையபடி எமது மாமூல் வாழ்க்கைக்குத் திரும்பி ஒரு வாரமாகிவிட்டது. எதிர்வரும் ஏப்ரல் மாத விடுமுறையில் மறுபடி ஒரு தடவை தோணாவடிக் கிராமத்திற்குச் சென்றுவரத் திட்டமட்டிருந்தோம்...ஆனால்...அது இவ்வளவு விரைவில்...இவ்வளவு குரூரமாகப் பலிக்கும் என்பது தெரிந்திருக்கவில்லை.

 

      வலைவீசி வாழ்ந்து கொண்டிருந்த அப்பாவி மக்களைää அலை வீசி விதி கொன்று வீசிய நாள் இன்றைய மார்கழி  26 என்பதைத் தெரியாமலேயே அன்றைய ஞாயிற்றுக் கிழமை  எங்களது வீட்டில் நான் ஓய்வாக உட்கார்ந்து தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தேன்.

 

      திடீரென உரத்து அலறின ஊடகங்கள்..ஆழிப் பேரலைகள் இலங்கையில் ஊழிப் பேரழிவை விதைத்து மானுட உயிர்களை மொத்தமாக அறுவடை செய்து மீண்ட சுனாமியின் பயங்கரச் செய்திகளால் நாங்கள் உறைந்து போனோம்....

 

      மனைவியும்ää ஷேபியும் என்னைக் குடைந்தெடுத்தனர்.. உடனடியாகத் தோணாவடிக் கிராமத்திற்குச் சென்று பார்த்து வரத் துடியாய்த் துடித்தனர்... நான் அவர்களைச் சமாதானப்படுத்தி தொலைபேசியில் தோணாவடிக் கிராமத்திற்குப்ää பேசமுயற்சித்தும்ää அது முடியவில்லை.... உடனடியாக ஒரு வாகனம் ஏற்பாடு செய்து தோணாவடிக் கிராமம் சென்று செமிலத்துவையும்ää ஜமீலாவையும் மியாமியையும்ää கூட்டிவரச் சொல்லி அடம்பிடித்த மனைவிääகுழந்தையைத் தவிர்த்து பதைபதைப்புடன் நான் மட்டும் தனித்துää தனிப்பட்ட வாகனம் பிடித்தும் கூட  தோணாவடிக் கிராமம் வந்து சேர இண்டு நாட்களாகி விட்டன.

                                    ()

                       

      சுக்கல் சுக்கலாகக் கிழித்துப் போடப்பட்ட ஓவியம் போலச் சிதறிக் கிடந்தது தோணாவடிக் கிராமம். சனங்கள் எவரையும் காணவில்லை...செய்வதையெல்லாம் செய்து விட்டு ஊழித் தாண்டவமாடிவிட்டு வழமை போல் அமைதியாக ஆடிக்கொண்டிருந்தது கடல்... கொலைகாரனின் முகம் போலக் கறுத்துக் கிடந்தது... தூரதூரத்தில் உடைந்து சிதறிய படகுகளின் சிதறல்கள்.. அழிந்து தடயமற்றுக் கிடக்கும் மீனவர் வாடிகள்.. அத்திவாரத்தோடு பிடுங்கப்பட்டு வீசப்பட்டிருந்த சந்தைக் கட்டிடம்..உலுக்கி விட்டாற் போலக் கொட்டுப்பட்டுப் போயிருந்த தோணாவடிப் பாலம்... கசங்கிய கந்தலாகிப் போன ஆரம்பப் பாடசாலை.... தாறுமாறாகக் கலைந்து பின்னிப்பிடுங்கப்பட்டு வீசப்பட்டிருந்த தென்னந்தோப்பு... எங்கு பார்த்தாலும் உடைசல்கள்..கற்குவியல்கள்.. மகா அழிவின் பயங்கரக் காட்சி கண்முன்னே ..... மனிதர் எவரையும் காணவில்லை....

 

வாகனத்தை தூரத்தே நிறுத்தி விட்டுச்  சற்றுத் தூரம் இடிபாடுகளிடையே நடந்தேன்... இனம்புரியாத பிண நாற்றம் மூக்கைக் குடைந்தெடுத்தது... மண்மலை நோக்கிச் சென்றேன்.... மறுபடியும் பயங்கரச் சுனாமி உயரே எழுந்து வீசுமோவென அச்சமடைந்தேன்.... ஆச்சரியமாக மண்மலைமேடு சற்றும் கலையாமல் அப்படியே இருந்ததது.மெதுவாக மேலேறினேன்....உச்சியை அடைந்தேன்... கீழே பார்த்தேன்.. ஒரு கிராமம் இருந்த தடயமேயில்லை...நான்அமைத்திருந்த கடல் சமிக்ஞைக் கோபுரத்தைக் காணவேயில்லை...மனம் குமைந்தது...கீழே சில மனிதர்கள் தென்பட்டனர்.. வேகமாகக் கீழே இறங்கினேன்...செமிலத்துவின் குடிசை வீடிருந்த உத்தேச திசையிற் சென்றேன்.. செமிலத்து.... ஜமீலா.... மியாமி....?

 

      பதட்டமாக நடந்தேன்.. காணப்பட்ட மனிதர்கள்  தன்னார்வத் தொண்டர் நிறுவத்தினர்....பிணங்கள் தேடி அப்புறப்படுத்தும் பணிக்காக வந்திருந்தனர்.. அவர்களை அடைந்தேன்.. அவர்களோடு இக்கிராமத்து மீனவர்களும் இரண்டொருபேர் நின்றிருந்தனர்.. என்னைக்கண்டதுமே ஒப்பாரியுடன் என்னைநோக்கி ஓடிவந்தனர்....ஒட்டுமொத்தமாகக் கதறியபடி தமது சோகக் கதைகளை ஒரே சமயத்தில் ஒப்புவித்து அரற்றினர்...என் கண்களில் நீர்முட்டி மனம் குமைந்து போய்...  யாருக்கு யார் ஆறதல் சொல்வது...? செமிலத்துää ஜமீலாவின் சிந்தனையில் என் மனம் பரபரப்படைந்தது... அவர்கள் ஓய மட்டும் காத்திருந்தேன்....

 

சரி..சரி..இவ்விடத்த சில்லறைக் கடை வச்சிருந்த செமிலத்து..ஜமீலா யெண்டு...? அவங்க  இப்ப....?”

 

நேத்தைக்கித்தான் அவங்கட மையித்தக் கண்டு பிடிச்சி எடுத்து அடக்கினம் ஸேர்..

 

என்னது.....?”  அதிர்ந்து போனேன்..

 

தாயும் புள்ளயும் கட்டிப் புடிச்சபடி  மண்ணுக்க பொதையுண்டு கெடந்தாங்க... ஸேர்.!    ந்தா.. இவ்விடத்ததான்....

    

ரெண்டு பேருமா...?”

 

ஓம் ஸேர்...அதுல  வெஸயம் என்னண்டால்ää அவன் செமிலத்துர புருஷன்காரனும் அண்டைக்கித்தான்     சவுதிலருந்து வந்திருந்தான்  ஸேர்..

 

என்னது...?”

 

ஓம் ஸேர்..அண்டு காலத்தால கல்முன டவுனுல வந்து எறங்கினான். ஊட்ட போகää கடக்கர ஓரமாகவே நடந்து வரக்குள்ளதான் அல எழும்பிற்று ஸேர்...

 

அ...அவனுமா.....?”

 

ல்லஸேர்...தப்பிட்டான். பெரிய அல அவனத் தூக்கி எறிஞ்சிற்று... ந்தத் தென்னமரத்தப் புடிச்சிட்டு தொங்கிட்டி ருந்தான்....எல்லாம் முடிஞ்சாப் பொறகு நாங்க போய் அவனக் காப்பாத்திட்டம்...|

 

ப்ப எங்க அவன்..?”

 

ஆளக் காணல்ல ஸேர்..

 

இதற்கு மேல் பேச என்ன இருக்கிறது...?   தனக்குப் பிறந்த குழந்தையை நான்கு வருடங்களுக்குப் பின்னர் பார்க்க ஓடிவந்த தந்தை....தனது இளம் மனைவியை காணப் பாலைவனத்திலிருந்து பதறி ஓடிவந்த கணவன்.....எங்கே அவன்.....?

 

கனத்துப் போன நெஞ்சுடன் செயலற்றுப் போய் கீழே உட்கார்ந்தேன்....என் மௌனத்தைப் புரிந்து கொண்ட சனங்கள் தானாகவே கலைந்து போய் தம் பணியைத் தொடர்ந்தனர்....எவ்வளவு நேரம் அப்படியே உட்கார்ந்திருந்தேனோ தெரியாது...திடீரென என செல்பேசி அலறத் திடுக்கிட்டு உணர்வுற்று காதில் பொருத்தினேன்....மனைவி!.

 

என்னங்க...எங்கஇருக்கிறீங்க..போய்ச்சேர்ந்திட்டீங்களா..?அவங்களக் கண்டீங்களா...? என்ன நடக்குது?”

 

அதுவந்து...இப்பதான்வந்துசேர்ந்திருக்கிறன்...அவங்களத்தான் தேடுறன்.. பிறகு கதைக்கிறேன் ப்ளீஸ்..

 

மேலே பேச முடியாமல் செல்பேசியை ஓய்வாக்கி விட்டேன். மெதுவாக எழுந்தேன்...மாலை மங்கிக் கொண்டிருந்தது.. தள்ளாடிய கால்களை உதறிவிட்டு மறுபடி செமிலத்துவின் கடை இருந்த இடத்தை நோக்கி நடந்தேன்.திடீனெ ஒரு வாலிபனைக் கண்டேன்...நெஞ்சம் காரணமின்றித் துடித்தது..அவ்விடத்தில் அவன் எதையோ தேடிக் கொண்டிருந்தான். அவனது கையில் ஒரு சிவப்பு நிற சின்னஞ்சிறிய குதிச்செருப்பு இருந்தது. அது....? என் மகள் ஷேபி ஜமீலாவுக்கு கொடுத்ததுவா....?

 

ஹேய்...  யார் நீ..?” என்றேன்.

 

என்னைப்பார்த்தஅவன்ää   திடீரென பரபரப்பாக அச்செருப்பின் பிய்ந்த வாரை இழுத்து விட்டு காதருகில் வைத்து...

 

ஹலோ..வ்.. யாரு.. பேசறது? செமிலத்தா...ஜமிலாக் குட்டியா..?” என்றான். திடீரென இடிக்குரலில் சிரித்தான். மறுடிபடி காதருகில் வைத்தான்.

 

அலோ..வ். நான் வாப்பா பேசறன். புள்ளேய்.. என்ட புள்ளேய்.. செமிலத்தோ..வ்.. எங்கடி இரிக்காள்...பேசங்கா...என்றான். திடீரெனக் கேவியழுதபடி தரையில் குப்பற விழுந்தான்...உடன் எழுந்தான்...தலை கலைந்திருந்தான்.. என்னைப் பார்த்தான்.. உடன் கோபமுற்றான்..

 

டேய்...!  எங்கடா என்ட பொண்டாட்டியும் புள்ளயும்.. எங்கடா எங்கடா...?” என்று ஆத்திரமாகக் கேட்டடியே என்னை நோக்கிச் சீறியெழுந்தான். நான் பயத்துடன்.

 

டேய்..யார்ரா நீ..?”   என்று உரத்துக் கத்தினேன்.

 

கேட்டிருக்கத் தேவையேயில்லை. ஜமீலாக்குட்டியின் கண்களும்ää கூர் மூக்கும் அவனிடம் அப்படியே இருந்தன... இடிக்குரலில் சிரித்த அவன் மறுபடி அவனது  ;செல்பேசி’(?)யை இழுத்துவிட்டு-

 

வந்துட்டண்டா செமிலத்தோவ்..!  வந்துட்டண்டா வாப்பா  செமிலாக் குட்டியோவ்...என்று கத்திச் சொன்னான்.. சட்டென மண்மலை உச்சி நோக்கி ஏறி அபாயமான வேகத்தில் ஓடினான்....உச்சியடைந்து..

 

என்ட கறுமந்தான்டோவ்...  என்று கத்திவிட்டு மறுபடி எதிர்ச்சரிவு நோக்கி தலைகுப்புற உருண்டு சென்று என் பார்வைக்கு மறைந்தான். விரைந்து துடித்த இதயத்தைக் கையால் அழுத்தியபடி மெதுவாக பிரதான பாதை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.. தூரத்தே ஏதோ பஞ்சுப் பொதிபோல ஓடி வந்தது...என் கால்களிடை வந்த வேகத்தில் புகுந்தது. நான் அலறி சட்டெனக் குனிந்து பார்த்ததேன்.

 

ஓ...மியாமி...!

 

நீயா......நீ மட்டும் தப்பி விட்டாயா...  அதனைக் குனிந்து தூக்கினேன்... என்னஒரு ஞாபக சக்தி அதற்கு... குறுகுறு விழிகளால் என்னைப் பார்த்தது. மிய்ய்யாவ்  என்றது. தன் சோகக் கதையைச் சொல்ல முயன்று  தன்முகத்தை என் மார்பில் தேய்த்தது.. அதை தடவி அணைத்தபடி என் வாகனத்தை நோக்கி நடந்தேன். அப்போதுää மறுபடி என் செல்பேசி அலறியது. எடுத்து காதில் வைத்தேன். என் மகள் ஷேபியின் குரல் கேட்டது.

 

ஹெல்லோ..? டெடா...! ஜமீலா எங்க டெடா?”

 

மிய்ய்ய்யாவ்.என்று பதிலளித்தது மியாமி.

 

என் கண்ணில் தழும்பிய ஒரு துளிச் சுனாமியைச் சுண்டியெறிந்து விட்டு இருவரும் வாகனத்தில் ஏறினோம் கொழும்பு  செல்ல.தினகரன் 2004.

                   

 

 

 

 

No comments:

Post a Comment