Saturday, March 12, 2022

பற்கொலைப் போராட்டம்

 பற்கொலைப் போராட்டம்

            என்னுடைய அலுவலக நண்பனான யாளுவாவுக்கு ஒரு வாரமாகச் சரியான பல்வலி. ஒரு பக்க ஈறும் கன்னமும் வீங்கிவிட்டிருந்தன.  யாளுவா என்றால் சிங்கள யாளுவா இல்லை.  ஓரிஜினல் இலங்கைத் தமிழன்.  யாழவன் என்பது அவனது அபூர்வமான  பெயர். அது சுருங்கி யாழுஆகிää சிநேகிதனாக இருந்ததில் யாளுவாவாகி விட்டது.

 

      பல் விஸயம் என்னவென்றால்ää  இவன் தன் பல் நோய்க்கும்ää பற்கொதியைத் தணிக்கவும்ää ஆலோசனை பெறாத ஆட்களே இம் மாவட்டத்தில் இல்லை. பல்வலி போட்டுப் பாடாய்ப் படுத்தியதில்ää அவன் விடும் அறுவைப் பகிடிகள் வெகுவாகக் குறைந்து விட்டதில் அலுவலகத்தில் பலரும் பெரும் நிம்மதியடைந்தனர். எனினும்  யாளுவாää  வலி எழும்பும் போதெல்லாம்ää பாட்டி வைத்தியம் முதல்ää  பணடோல் வரை பல்வேறுபட்ட முயற்சிகள் எல்லாம் செய்து பார்த்து விட்டான்.

 

      புகையிலையைக் கசக்கி பல்லிடுக்கில்ää அடக்கிப் புதைத்தான்.  சிலபோதுää  அதி காரமான மூக்குப் பொடியை  பல்லிடையில் கொட்டி நிரப்பினான்.  ஓரொரு சமயம்ää  சித்தாலேபகளிம்பைக் கூட பூசி அடைத்தான்.  தவிரவும்ää கொய்யா இலைகளைக் கொய்துää கொதி நீரில் அவித்துக்  கொப்பளித்தான்.  டிஸ்பிரினைக் கூடக்  கடித்துச் சப்பினான். அவன்பட்ட வேதனை எனக்கே தாங்க முடியவில்லை.

 

      பல்லைப் பிடுங்கிக் கடாசுவதை  விட வேறு எந்த வழியானாலும்ää அது எவ்வளவு கஷ்டமானதாக இருந்தாலும் அதனைச்  செய்வதற்கு திட்டமாகவிருந்தான்.  ஆனால்ää பல்லைப் பிடுங்குவதைத் தவிர வேறு எந்தவொரு வழியும் இருப்பதாகத் தெரியவுமில்லை.

 

      பல்லொன்றை இழக்க ஊசி மருந்து ஏற்றுவதற்குää ஒரு போதும் அவன் துணியவில்லை. அதற்கு ஒரேயொரு காரணம்ää மட்டுமே இருந்தது. அதாவது பல் பிடுங்கும் முன் பல் வைத்தியர் ஈறுகளில்  ஏற்றும் ஊசியையும்ää  பல் பிடுங்கும் குறடுவையும்ää கனவில் கண்டாலே  திடுக்கிட்டு அலறிவிடுவான்.  அவ்வளவு பயம். இந்த இரு பற்கொலைக் கருவிகளையும்ää  கண்டு பிடித்தவனின்; பல்லைக் கழட்டிவிடும்; அளவுக்கு ஆத்திரப்பட்டுக் கொண்டிருந்தான்.   ஊசிää குறடு பயத்தை வெல்ல ஒரு வழியும் தென்படவில்லை. பல்வலி இனித்  தாங்க முடியாத உச்சத்தில் பற்கள் நடுநடுங்க இறுதியாக என்னிடம் வந்துää ‘பல்லைக் காட்டினான்.

 

மச்சான் அப்துல்லா!ää  இத இப்பிடியே விட்டுக் கொண்டிருக்க இனியும் ஏலாதுப்பா.. நேற்று ரா முழுக்க நான் பட்டபாடு கடவுளே. தாங்கேலாதுப்பா.. இனிப் பிடு;ங்கி விடுவமென்ன மச்சான்..?’

 

நானா பிடுங்க வேணாமென்டு சொன்ன? நீ சின்னப் பிள்ள போல ஊசி..

 

அந்தக் கதைய விடுமன். நாளக்கி எங்காயிலும்ää ‘பிரைவேற்றுலகாசு கொடுத்து பிடுங்குவமென்று சொல்றன்.  அங்கயும் இன்ஜெக்ஸனேமச்சான்.?’

 

இன்ஜக்ஸன் போடாமலும்ää காசுச் செலவும் இல்லாமலும்ää பல் பிடுங்கிறதென்டால்ää நம்மட ஒபிஸ்  மிஸ். சுனெத்ராவிடம் பல்லைக் காட்டிக்  கிண்டிப் பாரேன்..

 

சரி சரி எவ்வளவாகும் பிடுங்க..?’

 

ஆகும் ஒரு நானூறு ரூபா.. பகிடி என்னன்டால்ää நானும் நாளைக்குப் பல் கிளீன் பண்ணத்தான் இருக்கன். ..சரி ரெண்டு பேருமாப் போவம். ஆனா ஒரு கண்டிஸன்.

 

நீ என்னடா கண்டிசன் போட அத்துலத்முதலியே..? என்னடாது?’

 

இதப் பாரு நீ ஓட்டை வாய். அங்க பல் டொக்டருட்ட சனம் வாற இடத்துல உன்ர விழல் பகிடிகளை விடக் கூடா. சுருக்கமாச் சொன்னா நீ வாயே திறக்கக் கூடாது. செரியோ..

 

வாயத் திறக்காமப் பல்லப் பிடுங்கேலுமே.. அது மட்டுமில்லாம எனக்கிருக்கிற கொதியில பகிடி விட ஏலுமே.. சரிää ‘பிரைவற்றுல எது நல்லது..?’

 

ந்தா டவுனுக்குள்யே இருக்குது. இந்தியன் டொக்டர் போவம். ஆனா திடீர் திடீரென்று பிஸ்டல்வெடி நடக்குது. பரவாயில்ல.. ந்தாப் பக்கத்துல வாவி வீதியில பெரிசா போட் மாட்டியிருக்குமே.. மதுரா டெண்டல் ஸர்ஜரியெண்டு..?”

 

()

 

      மதுரா டென்டல் ஸர்ஜரி  எங்களை வரவேற்றது. ஒரு வெட்டுப்பல்லையும்ää இரண்டு வேட்டைப் பற்களையும்  அடுக்கி வைத்தாற் போன்ற (யாளுவாவின் பார்வையில்) தோற்றமான கட்டடத்துள் பல்வேறு பயங்களுடன்  அவனும்ää பயமற்று நானும் நுழைந்தோம். யாளுவாää ‘வலிக்குமே மச்சான்..? கடுமையா வலிக்குமே மச்சான்..?” என்று வழி நெடுகக் கேட்டு வந்த கேள்வியை பலவந்தமாக நிறுத்திய போது  மணி சரியாக 10:10 என்று பல்லைக் காட்டியது.

 

      பல்வரிசை போல அமைக்கப்பட்டிருந்த கருமபீடத்தில்ää முன்பற்கள் சற்றுத் தள்ளியிருந்த ஒரு பெண் வீற்றிருந்தாள். எங்களிருவரையும் கண்டதும்ää ‘பல்லாண்டு கால சிநேகிதமாய்ப் புன்னகை  உண்மையாகவே காhஆட்டினாள்.  ஹெலோ வெல்கம்என்று முகமன் கூற முயன்று  வெல்கவ்என்று பல் தட்டினாள்.  துருத்திக் கொண்டிருந்த முன்பற்களை உள்ளே தள்ளும் இடையறா முயற்சியின் இறுதிக் கட்டமாகää  உள்ளே ஈறுகளில்ää பற்கம்பி; மாட்டியிருந்தாள்.  கொஞ்சம் பல்லை மறந்தால்ää பக்க வாட்டில் சற்றே அழகாகவும் இருந்ததாகத் தோன்றியது.  பளீச் சீருடையில்ää தாதியாகவும்ää உபசாரிணிää பதிவாளிää காசாளி ஆக எல்லாமாகவும் செயல்பட்டாள்.

 

      எனக்கு பல் சுத்தம் செய்ய என்று  250 ரூபாவும்ää  யாளூவவுக்குப்  பல் பிடுங்க 450 ரூபாவும்ää கறாராக அறவிட்டுää பில் தந்தாள்.  கைகளில்ää 2ää 3 என்று முன் பல்வடிவிலான  டோக்கன்கள் தந்தாள். அப்போதுää யாளுவா அவளிடம்ää இறுதி முயற்சியாகää  ஊசி போடாமல் பல்  பிடுங்கும் பொற்காலத்தை நோக்கி பல் நிபுணர்கள் ஏனின்னும் பல்வேறு வழிகளிலும்ää முன்னேறவில்லையென்றää தனது பற்பல சந்தேக நிவர்த்திகளை எடுத்துவிடத்  தொடங்கியதும்ää அவள் எரிச்சலுடன் சிரித்துää பற்தொழிற்சாலைக் கதவைச் சுட்டிக் காட்டினாள்.  கதவில்ää வெண்கல மஞ்சள் தட்டில்ää

 

னுசு.ர்.யு.ளுநுனுர்ரு ஆயுவுர்யுறுயுN.னு.ளு (iனெயை) Pஆடு. னு.ர். Phட. (நேற னநடாi)

 

என்;று பல் வைத்தியரின் பல்லாராய்வுத் திறன் பற்றிய பல்வேறுபட்ட பல்கலைக்  கழகங்கள் வழங்கிய பல்வேறுபட்ட பற்பல பட்டங்கள் அறைச் சுவர் முழுக்க  பற்கள் பற்றிய பற்பல புகைப்படங்கள்.. சித்திரங்கள்.. வர்ணச் சுவரொட்டிகள்.. தத்தம் பற்களைக் காட்டிக் கொண்டிருந்தன. ஆரோக்கியமான பளிச் பற்களுடன் அப்பா அம்மா பிள்ளை என்று புன்னகைத்தனர்.. வெட்டும் பல் பெரிதாக்கப்பட்டுää கூம்புக் கோபுரமாயிருந்தது. கோடுகளும் அம்புக் குறிகளும்ää கிடைப்பாடாக இழுக்கப்பட்டுää இது என்புமச்சைää இது பற்சுவர்ää இது மச்சைக்குழி என்று சந்தேகமறக் காட்டின. முப்பத்தி இரண்டு பற்களும்ää  பெரிதாக்கப்பட்டுää இன்னொரு படத்தில்ää தலதா மாளிகைச் சுற்றுமதிலை நினைவூட்டியது.

 

      மேலும்ää ‘பற்சுத்தம் பேணிää நற் சுகம் அணி!ää  பல்லுப்போனால் சொல்லுப் போச்சு”ää ‘ஆலும் வேலும் பல்லுக்குறுதி”ää  போன்ற பல்மொழிகள் வேறு.. இடையிடையே சாமர்த்தியமாகää மதுரா பற்தூரிகைää மதுரா பற்பொடிää மதுரா மௌத்வோஸ்’ää மதுரா பற்பாதுääகாப்பு(க்)கள்ää மதுரா பல்வலி நிவாரணி ஆகிய சுய விளம்பரங்களும்ää ‘பல்லிளித்துக் கொண்டிருந்தன.  பல் பிடுங்க முன்னரும்ää பல் பிடுங்கிய பின்னரும்ää பேண வேண்டிய  பற்பத்து ஆலோசனைகள் அடங்கிய அட்டை வாசிப்பரின்றித் தொங்கின.. டொக்டர் இன்னும் வரவில்லை.

 

கதிரைகளில் அமர்ந்திருந்தோம். பக்கத்தே முதலாம் இலக்கம் பெற்று  முதலில் பல்லைக் காட்டுவதற்காகää ஒரு தமிழ்ப்பெரியவர் உட்கார்ந்திருந்தார்.  தீரகேசரி படிக்கப்பட்டுää பின் கவனமாக மடிக்கப்பட்டு. கமுக்கட்டில் யாரும் இலேசாக இரவல் கேட்டுவிடாதபடி பத்திரத்துடன் இருந்தது.

 

இவர் ஓய்வு பெற்ற தமிளாசிரியர். தன்னட்ட மீதியாயிருக்கிற ஒன்பது பற்களிலும்ää ஒண்டைப் பலி கொடுக்க வந்திருக்கிறார்.. அது கட்டாயம்ää தமிழ்ஞானப் பல்லாகத்தானிருக்கும்.. கேட்டுப் பாக்கிறீரே..?” யாளுவா என் காதைப் பல்லால் கடிக்க ஆரம்பித்தான்.

 

இல்லை பேசாமல் பல்லை மூடிக் கொண்டிரு மஹனே.. உமக்குமிது வழி.. நீர் போகுமட்டே..என்று  நானும் கோபமாக பல்லைக் கடிக்கவேää யாளுவா அமைதியானான்.  டொக்டர் இன்னும் வரவில்லை. தமிழ்ப்பெரியவர் பொறுமை இழந்துää தீரகேசரியை மீள்படிப்பு ஆரம்பித்தார்.

 

சற்றுத் தள்ளியிருந்த கதிரையில்ää ஒரு காத்தான்குடி முஸ்லிம் வயோதிப மாதுவும்ää அவளது அழகான பர்தாமகளும் அமர்ந்திருந்தனர். ஆறாம் இலக்கம் பெற்றிருந்தனர். பல்வருத்தம் யாருக்கென்ற தெரியவில்லை.  சாதாரணமாக இருவருமே கடலை சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.  பற்கிளிப்பெண் இவர்களை கடலை சாப்பிட வேண்டாமென எச்சரித்துச் சிரித்தாள்.  திடீரென யாளுவா என் காதருகேää

 

மகளுக்குத்தானப்பு பல் வருத்தம். தாய்க்காரிக்கு ல்லை.  பெட்  கட்றீரே.. கேட்டுப் பாப்பமன்..என்றான்.

 

இதென்னடா பெரிய கண்டு பிடிப்பு. கிளவிக்குத்தான் பல்லே இருக்காதே அப்புறம் எப்படி பல் வருத்தம்..? கண்டிஷனை மீறுகிறாய்.. அப்பனே.. பல்லை மூடிக் கொண்டிரு..

 

இல்லை.. கிளவிக்கு முப்பத்தெட்டுப் பல்லும் இருக்குது பாரப்பு.

 

இருபத்தெட்டா பல்..? ஏனப்படி?”

 

ஏனா  கண்டுபிடி.. முடியாவிட்டால் கேள்.

 

சொல்லண்டா.

 

மகள் ஒரு பக்கமாகத்தான் சாப்பிடுறாள். தாய்க்காரி ஒரு பக்கத்தில் கடலையும்ää மறு பக்கத்தில் வெற்றிலை  பாக்கும் குதப்புகிறாள் பார்..

 

சரிசரி..

 

 அச்சமயம்ää வெளியிலிருந்துää திடீரென இரண்டு பாதுகாப்புப் படைச் சிப்பாய்கள் உள்ளே வந்தனர். தோள்களில் துப்பாக்கிகள்.. இராணுவப் பைகள்.. சீருடை மார்புகளில்ää பல்வேறு சின்னங்கள்.. தொப்பியில் யானை.. மார்பில் சிங்கம்..  நேராக பற்கிளிப் பெண்ணிடம் சென்றனர். மறுபடி அவள்  வெல்கவ்வென்றாள். சிங்களத்தில் விசாரித்தனர்.  அவள் ஆச்சரியப்படுமாறுää அற்புதமாய்ää சிங்களத்தில் பல்பற்றிப் பற்பல விளக்கமளித்துää முன்னூறு ருபா வசூலித்துää  5ம் இலக்கம் கொடுத்தாள். ஒரு சிப்பாய் திடீரென திரும்பி எங்களிடம் நெருங்கிää ஆயுதத்தை தலையால் கழற்றி மடியில் வைத்து உட்கார்ந்தான். அதன் குழாய் எங்களையே நோக்கியிருந்ததால்ää ஒரு தற்பாதுகாப்புக் கருதிää நாங்களிருவரும்ää கண்களால்ää பாஷை பரிமாறி சும்மா  சாக்குப் போக்குடன்ää எழுந்துää வரிசை மாறி உட்கார்ந்தோம். யாளுவா பயத்துடன்ää

 

ஊசியாலை பல் பிடுங்கினாலும் படுங்கலாம்ää உந்தத் துவக்காலை பல்லுப்  பிடுங்கிச் சாகேலுமே மச்சான்.. தற்செயலா வெடிச்சுதெண்டால்..?”

 

இதை உணர்ந்த சிப்பாய்ää எங்கள் அறியாமை கருதி கொஞ்சமாய்ப் பல்லைக் காட்டிச் சாந்தப்படுத்தினான். மற்றச் சிப்பாய் வெளியே இவனுக்குக் காவலாக நின்று கொண்டுää அதே சமயம்ää சிகரெட்டும் புகைத்துக் கெர்ண்டிருந்தான்.  10:40.  டொக்டர் இன்னும் வரவில்லை. இனி வந்து விடுவார்.

 

மச்சான்.. அந்தா வெளியே சிகரெட் குடிக்கிறவனுக்குத்தான் பல் வருத்தம்.. விளங்குதே..?”

 

ஷட்அப்.. டேர்ட்டி மௌத்.என்று பல்லை நறநறத்தேன்.

 

ஏனெண்டாப் பாருமன்.. பல் பிடுங்கிய பிறகாலை சிகரெட் குடிக்க ஏலாதுதானே.. அதான் ப்பவேää ஒண்டுக்கு மேலொண்டாய் மூட்டுறான்.

 

      மேலும் யாளுவா கதை வளர்க்க முன்னரே வாசலில்ää ‘ஹொண்டா 125’ உறுமியபடி விரைந்து வந்தது. நேராக முன் விறாந்தைக்கே வந்து அதனிடத்தில்ää ஓய்வானது.  அதில் வந்தவர்  இறங்கி தன் மண்டையோட்டுக் கவசத்தை வெகு கவனமுடன் கழற்றினார்.  அப்பிப் போயிருந்த தலைமுடியை பின்பொக்கட் சீப்பெடுத்துää அவசரமாய் வார்ந்தார்.  உடன் அழகாக இருந்தார்.

 

டொக்டர் வந்துட்டாங்க..  மஹத்தயா எவில்லா

 

பற்கிளிப்பெண் இரண்டு அரசகரும மொழிகளையும் அமுலாக்கிக் கூறிவிட்டு முன்விறாந்தைக்குச் சென்றாள். பல் வைத்தியர் கம்பீரமாகவிருந்தார். வெண்ணிற ஆடையில்ää வெண்ணிறஆடைமூர்த்தி போலவேயிருந்தார்.  எங்கள் ஏழு பேரையும் ஒருதடவை பார்த்தார். பின் பொத்தாம் பொதுவாகää

 

வாங்க..வாங்க.. நண்ணாயிருக்கறீங்களா..?” என்று பல்லவ நாட்டு மண் வாசனையுடன் குசலம் விசாரித்து அழகாகச் சிரித்தார்.  உண்மையிலேயே பல் வைத்தியருக்கு அரிசிப் பற்கள் வரிசைப் பற்களாக இருந்தன. அவரது பற்களே அவரது தொழிலுக்கு ஒரு இலவச விளம்பரமாகவிருந்தது.

 

பல் டொக்டர் உண்மையில் பல்லழகரெல்லே..? எனவேää புன்னகை அரசர் என்ற பட்டத்தை அவருக்கு அளிப்பதோடுää அவரது பெயரையும் பற்குணம் என்றும் சிபார்சு செய்கிறேன்.என்று யாளுவா ஆரம்பித்தான்.

 

மேலும் பற்குணமானவர்ää ‘பல்லவ நாடுவிட்டு வந்து பற்சேவை புரிபவராதலால்ää  நானும் என் பல்கலைக் கழகத்திலிருந்து அன்னாருக்கு பல்கலைவேந்தர்என்ற பட்டத்தையும் இலவச இணைப்பாக அளித்துää ஆமோதிக்கவேää   டொக்டருக்கு பற்பல பட்டங்களாயிற்று.

 

      பற்கிளிப் பெண்ää  தலைக்கவசம்ää கைப்பை முதலான அவரது பல்வேறு  சாமான்களை வாங்கிக் கொண்டுää சென்றாள். புன்னகை அரசர் மறுபடி எங்களுக்கு புன்னகையும்ää ஆயுதபாணிகளுக்கு விஷேடமாக ஆயுபோவன்னும் வழங்கி விட்டுää தனது பற்பார்வையிடும் அறைக்குள் நுழைந்தார். திடீரென யாளுவா முகம் வேர்த்தான். இதுவரையும் இல்லாத பயமும்ää பல்வலியும் ஆரம்பித்தன.  பயத்தில் பல்லாடினான். ஊசிப்பயம் அவனது பற்களை நடுநடுங்க வைத்தது.

 

      முதலாம் இலக்கம் பெற்றிருந்த தமிழ்ப்பெரியவர்ää ‘பொறுத்தது போதும் பொங்கியெழுந்துää  அறை வாசலை அடைந்தார். உட்புகுந்து பல்லிளித்துப்  பல்லிழக்கத் துடித்தார்ää  உள்ளே எட்டிப் பார்ப்பதும்ää தீரகேசரி ஒருவரி படிப்பதுமாக பல்வேறுபட்ட அவஸ்தைகளை வெளிக் காட்....

 

இலக்கவ் ஒண்ணு..! வாங்க..

 

      வாங்க முன்னரேää  தீரகேசரியை விடாது பற்றிக் கொண்டுää உட்புகுந்தார்.  புகுந்து மூன்றே நிமிஷத்தில்ää  தன்; ‘பல்வாயை தீரகேசரியால் பொத்திப் பதறியபடி வெளியே வந்தமர்ந்தார். வியர்த்;திருந்தார். ஓவ்..ää ஊசி போட்டாயிற்று. வலி தெரியாமலிருக்க முதற்தடவையாக எங்களைப் பார்த்துப் பல்காட்டாமற் சிரிக்க முயன்று தோற்றார்.

 

மனிசன் சிரிக்குது பாத்தியே.. தமிழ்ப்பழத்துக்கு ஊசி பழக்கமாயிட்டுது போல..என்றேன். அதற்கு யாளுவாää தன்னிலை மறந்துää ‘சும்மாவா.. 25வது பல் விழுத்தாட்டும்  வெள்ளிப் பல் விழா நாயகரெல்லே..என்றதும்ää  நான் சிரிப்படக்க முடியாமல் பல்லைக் காட்டää பற்கிளிப்பெண் திடீரென  வெளிப்பட்டுää  ஊசி சிரிஞ்சரை மேல் நோக்கி பீய்ச்சி விட்டு. யாளுவாவைப் பார்த்து மெல்லிதாகச் சிரித்தாள்.   யாளுவாவின் முகம் கறுத்துப் போய் விட்டது.  பற்கள் கிடுகிடுக்க ஆரம்பித்தன. எனினும் வருவது வரட்டுமெனச் சற்று தைரியம் வரவழைத்து எழுந்தான்.

 

      சட்டென பல்வைத்தியர்ää ஊசி சிரிஞ்சரை வாங்கிக் கொண்டுää  முகமூடியணிந்து வெளிப்பட்டார். முகமூடியை ஊடறுத்துப் புன்னகைத்தது அவரது கண்களில் தெரிந்தது.  யாளுவா திடுக்கிட்டு அறுவை மாடு வெட்டுக் கத்தியைப் பார்ப்பது போல பீதியுற்றான். என் கையை இறுக்கமாகப் பற்றிக் கொண்டான். மாறாத  புன்னகையுடன்  டொக்டர்ää

 

அது என்னன்னாக்காää ராத்ரி தூங்கப் போறச்சேää பல் துலக்கினாய்ங்க ண்ணு வைங்க.. ஒரு நாளும்ää பல் நோய்க்கு சான்ஸே  ல்லீங்க..  அதுல பாருங்கää ‘டூத்பேஸ்டுகள தினுசு தினுசா அட்வடைஸிங்பண்றாங்க. கறுவா கலந்தது..  புளொரைட்  உள்ளடக்கியது ண்ணெல்லாம் சொல்றாங்க.  எல்லாம் சுத்த டூப்ளிக்கேட்டுங்க..  அதெல்லாம் சுத்தமா மறந்திடுங்க.. இதுல பாத்தீங்கண்ணாää இப்ப என் பல்லைப் பாருங்க.  ‘‘..யீஈஇ...யீஈஇ...பாத்தீங்களா..? எங்க நாட்டு மதுரா பற்பொடி தவிரää நான் எதையுமே இதுவரைக்கும் யூஸ் பண்ணினதில்லீங்க.. இது நெசங்க..

 

என்று பல்வேறு  உபதேசம் புரிந்து விட்டுச் சிரித்துää யாரும் எதிர்பாராதவிதமாக காத்தான்குடி மகளிரை அணுகிää

 

ஏம்மா.. ந்த மாதிரி நேரங்கள்ளயும் வேர்க்கடலை சாப்ட்டுத்தான் ஆகனுமா என்ன..?” என்று கோபப்பட்டுää  அதற்குப் பழி தீர்க்கு முகமாகவோ என்னவோ  சட்டென பற்கிளிப்பெண்ணுக்குச் சாடை காட்டää அவள் தண்ணீருடன் ஓடோடி வந்து  மகளிடம் வாய் கொப்பளிக்கக் கொடுத்துää முடியää வாயை நெம்பித் திறந்தாள்.  டொக்டர்ää கண்ணிமைக்கும் வேகத்தில்ää அந்த இடத்தில் வைத்தேää அவளின்ää மேலீறுகளில்ää ஊசியைப் பாய்ச்சினார்.

 

ஙா..ஆ..ஆ..ஹ்என்று திடீனெ யாளுவா அலறினான்.  பீதியில் விறைத்துப் போனான்.  நான் அவனை அடக்கும் போதேää மகளும் கீச்சுக் குரலில்  அவலக் குரல் கொடுத்துத் தன் தாய் மீது சாய்ந்து விட்டாள். முகம் வியர்த்துப் பல்லொடுங்கிப் பீதியடைந்த  யாளுவாவின் பற்கள் தந்தியடிக்க ஆரம்பித்தன. அடுத்துää யாளுவாவின் முறைதான்.

 

அங்க ஊசி போட்டாக்கா சாருக்கு வலிக்குதுங்களா..  சரிங்க.. ப்ப  இலக்கம் ரெண்டு வாங்க..

 

‘......................”

 

இலக்கவ் ரெண்டு. அண்ணர் வாங்க..

 

நீயும் உள்ள வா மச்சான்ää  ப்ளீஸ்!

 

இல்லைங்க.. அவர் நவ்பர் த்ரீ’.. நீங்க மட்டுவ் வாங்க..

 

போ.ääபோ.ää  பயப்படாதடா..!   நான் ஞ்சதானே இருக்கன்.

 

      யாளுவா உயிர்;க்கொலைப் பிராணியின்ää பீதியுடன்ää பரிதாபமாக என்னைப் பார்த்தபடியே  கதவு நிலையருகே  தயங்கித் தயங்கி நிற்கவேää திடீரென டொக்டரால்ää  அன்புப் பலவந்தமாக உள்ளிளுக்கப் பட்டு மறைந்தான்.  நான் ஆவலோடு கதவிடுக்கால்ää உள்ளே ஊடறுத்துப் பார்த்தேன். உள்ளே பற்கொலைப் போராட்டம் நடந்து கொண்டிருந்தது.

 

      அப்ää ‘பல்லோ விண்வெளிக் கப் பல்இருக்கையில்ää உயரத்தில்ää யாளுவா பலிபீடத்தில்ää  உட்கார வைக்கப்பட்டிருந்தான். கண்கள் பிதுங்கிப் போய்ää டொக்டரின் கையிலிருந்த  ஊசி சிரிஞ்சரைப் பார்த்துப் பல்லாடிக் கொண்டிருந்தான்.  தலையை இப்படியும் அப்படியும் ஆட்டிக் கொண்டிருந்தான்.  டொக்டரோää யாளுவாவின் வாயைத் திறப்பதற்காகää  மேவாய்க் கட்டைகளைப் பிடித்து  பலம் கொண்டு மேல் நோக்கித் தள்ளும் முயற்சியில்ää இடையறாது போராடிக் கொண்டிருந்தார்.  பற்கிளிப்பெண்ää பஞ்சுää ஊசி சுமந்த தட்டினை வைத்துவிட்டுää டொக்டருக்குதவியாகää ‘மிஸ்டர்ää வாயத் திறங்க.. ஆ  காட்டுங்க..என்றவாறேää பற் தடியினால்ää யாளுவாவின் வாயைக் கிண்டிச்ää சட்டென உள்ளே ஒட்டினாள். பின் நெம்பித் திறந்தாள். கிடைத்த அவகாசத்த்pல்ää அங்கேயே உதட்டுக் காவடி போல  பற்தடியைச் சொருகி விட்டாள்.

 

      ஆனால்ää யாளுவா தன்னிரு கைகளினாலும்ää வாயைப் பொத்தப் பேராடிக் கொண்ருக்கää  நான் சட்டென உட்புகுந்துää போராட்டக் களத்தில் குதித்துää அவர்களுக்குதவியாகää அவனது இரு கைகளையும் பலமாகப் பின் தள்ளிப் பிடிக்கää மூவரினதும்ää பலமிக்க விடாமுயற்சியில்ää யாளுவாவின் வாய்க்கோட்டை பிளவு கண்டது.  சுற்றும் தாமதிக்காத டொக்டர்ää யாளுவாவின் வாய்ப் பிளவுக்குள்  கிடைத்த இடைவெளியில்ää வெற்றிகரமாக உள் நுழைந்துää முழுமையாக ஆக்கிரமிப்புச் செய்துää  அவனது கடைவாய்க் கபாடத்தில் ஏதோ ஆராய்ந்துää பார்த்தாh.  அதே கணத்தில்ää பற்கிளிப்பெண்ää ‘சிரிஞ்சரைநீட்டää எவ்வித அசூசையுமின்றி யாளுவாவின் நாக்கைப் புறந்தள்ளி அவனதுää கடைமுரசில்ää பொருத்தமான இடம் தேடிச்ää ...சுர்ர்ர்ர்ரீ..ரித்தார்... அதே விநாடியில்ää எருமை மாடு ஒன்று கதறிய சத்தம்  யாளுவாவிடமிருந்து எழுந்தது. திமிறி விடுபட்டெழுந்த யாளுவா வெளியே பாய்;ந்து சென்றான்.. வாய் பொத்த முயன்று தடுமாறி வாயைத் தேடினான். கண்களில் வெள்ளம் பிரவாகிக்க என்னைக் கொலை வெறியுடன் பார்த்தான். எனக்கோ வாயெல்லாம் பல்லாகி விட்டது. தொடர்ந்து டொக்டரும் வெளிப்பட்டார்.  அழகாகப் புன்னகைத்து மறுபடியும் தன் பல் வசீகரத்தை வெளிக் காட்டினார்.

 

     யாளுவா வாயைத் தேடிக் கொண்டிருக்க அறை நடுவில் வந்து நின்று  தெரு வித்தைக்காரனைப் போல தட்தட்டென்று கைகளைத் தட்டிää அனைவர் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தார்.  கையில் ஒரு மந்திரக் கோல்.. சுவரில் தொங்கிய புனிதப்பல்பதித்த தலதாமாளிகைக் கூம்புச் சுவர்களை மந்திரக் கோலால் தொட்டுக்காட்டிää

 

இதுல பாத்தீங்கண்ணா..ää இது வெட்டும் பல் நான்;கு. கோரைப் பல் ரெண்டு. அரைக்கும் பல் நான்கும்ää.. இந்த வரிசையில்ää  சாப்பாட்டைக் குழைக்கும் பல் ஆறும் ..ம்.. மொத்தம்.. பதினாறு..

 

தன்னுடைய அழகிய பல் வரிசையுடன் மறுபடி ஒப்பிட்டுக் காட்டிää என்னைக் குறிப்பாகப் பார்த்துää

 

கீழ் வரிசையில் பாத்தாக்காää இதே மாதிரி மேலரையில ஆறு..இடப்பக்கம் ரெண்டு.. அப்பண்ணா.. நாலு.. வலப்பக்கம் நான்கு.. பனிரெண்டு ஒரு பக்கம்.. ஸோ.. மொத்தம்..?” என்று திடீரெனக் கேட்கவேää தடுமாறிய நான்ää

 

இருபத்தெட்டு

 

என்று சொல்லிவிட்டேன் போலிருக்கிறது. உடனே யாளுவாவிடமிருந்துää  அந்த நிலையிலும் எழ முயன்ற  சிரிப்பொலி  கீறிச்சிட்டு உறுமலுடன் அடங்கியது. என் தப்பான மறுமொழிக்காக சிரிப்பை அடக்கமாட்டாமல்ää தோள்கள் குலுங்கிக் கொண்டிருந்தாள் பற்கிளிப்பெண். .

 

என்ன இருபத்தெட்டா.. நெசமாவே இருபத்தெட்டுங்களா..?”

 

டொக்டர் ஏகப்பட்ட அவநம்பிக்கையுடன்ää என்னைப் பார்க்க  தீரகேசரி கோபத்துடன் படபடத்தது. நான்  சுதாகரித்துää விரைவில் கணக்குப் பார்த்து சரியான பதில் சொல்வதற்கிடையில்ää முன் விறாந்தையில்ää பாடசாலைச் சீருடையுடன் ஒரு மாணவன்  சைக்கிளில் வந்து இறங்கினான். முகத்தில் அரும்பு மீசை. பல் தெரியவில்லை. முதுகில் புத்தகப்பை.  பற்கிளிப் பெண்ää மாணவனை அணுகினாள்.டொக்டர் விடாமல் என்னைப் பார்த்துää

 

த்சே.. இருக்காதுங்க.. மேலரை ஆறு  ண்ணா கீழரை ஆறு.. பன்னிரண்டு.. முன் வெட்டுப்..

 

டொக்டர் முடிக்கு முன்னரே பாதுகாப்புச் சிப்பாய் சட்டென  எழுந்துää இந்தத் தமிழ்;ப் பல் விரிவுரையைக் கேட்கத் தயாரில்லாமல்ää

 

மெ.. தொஸ்தர் மஹத்தயோ.. அபிட்ட ஹதிஸி வெட நிஸா மேகொல்லாட்ட இஸ்ஸர மாவ டிக்க வளண்ட வெரித..?”

 

      உடன் டொக்டர் தன் பற்பேருரையை இடைநிறுத்திää சிப்பாயுடன் உடன்பட்டுää  என்னிடம் புன்னகை வீசி அனுமதி பெற்று  அவனுடன் உள்ளறை  சென்று மறைந்தார்.  மற்றச் சிப்பாயும்  கூடவே சென்று  அறைக் கதவருகில் காவலிருந்தான்.

 

      தீரகேசரி திமிர்த்தலுடன்ää கடைசிப் பக்கத்தில் எதையோ கவனமுடன் படித்துக் கொண்டிருந்தார். முஸ்லிம் மாதுவும் மகளும் ஒருவர் மீதொருவர் சாய்ந்து கொண்டு இருவருமே அணுகிக் கொண்டிருந்தனர்.. நான் யாளுவாவை பரிதாபத்துடன் பார்த்தேன்.. யாளுவா  வாயெல்லாம்   மரத்துப் போய்.. உமிழ்நீர் துப்ப முயன்று அநியாயமாக வீணியிழுத்துக் கொண்டிருந்தான்.. கண்களில் பாதி மரண பயம் மறைந்து விட்டிருந்தது..   அந்த நிலையிலும்ää திடீரெனää யாளுவா கண்களில்ää ஒளி பளிச்சிட.. என்னை நோக்கி  சைகை செய்து  கூப்பி;டடு.  பெரியவர் படித்துக் கொண்டிருந்த செய்தியைச் சுட்டிக் காட்டினான்..

 

பல்லுப் போனாலும் சொல்லுப் போகாது..

உறுதி..!   வலிமை..!!    சீன நிபுணத்துவ சேவை.!!!

{வாங்கூ பொய்ப்பல் செட். விலை: 3000 முதல்..

இம்மாதம் 30ம் திகதிக்கிடையில் கொள்முதல் செய்வோருக்கு

கிளீனிங் வோஷ் சொலுசன்  இலவசம்..

 

சிரிப்படக்க முடியாது நான் சட்டென முகத்தைத் திருப்பிக் கொண்டேன். பற்கிளிப்பெண் மாணவனுக்கு பில் எழுதி இருநூறு கேட்டாள். பள்ளிச் சிறுவன்ää  தனது முதுகுப் பையைக் கழற்றினான். அதன் வரி ஷிப்  பற்களை பிரித்துää உள்ளே கை விட்டுää நிதானமாக வெளியே எடுத்தான்.

 

ஒரு கறுப்புக் கைத்துப்பாக்கி.!

 

திடீரெனத் தாவிய அவன்ää மறைப்பெடுத்துப் பதுங்கிச் சட்டெனக் குறி பார்த்துää மூன்று முறை சுட்டான்.  அறைவாசலில் காவலிலிருந்த சிப்பாய்ää

 

‘..ம்ம்ம்மே..

 

என்ற ஈனஸ்வரச் சத்தத்துடன்ää தலைப் பொத்தலால்ää பீச்சியடித்தää குருதி விளாறுடன்ää  ஒருக்களித்து விழுந்ததைப் பீதி கக்கும் விழிகளால் பார்த்துக் கொண்டிருந்தவர்கள்ää..

 

அந்தப் பள்ளி மாணவன் மிக நிதானமாக எழுந்து மறுபடி புத்தகப் பையைத் தோளில் மாட்டிää  சைக்கிளில் நிதானமாக ஏறிச் சென்றதை எப்படிக் கவனித்திருக்க முடியும்..?

 

      அதிர்ச்சியால்ää ஒரு கணம் ஸ்தம்பித்துப் போன மதுரா டெண்டல் கிளினிக் மறுகணம் திமிலோகப்பட்டது.  வேட்டோலி கேட்டதுமேää பின்புற யன்;னலால்ää மற்றச் சிப்பாய் விறைத்துப் போன தன் வாயில்  பஞ்சடைத்தபடி தன் அருமை நண்பனைக் கைவிட்டுப் பறந்தோடினான்.

    

பற்கிளிப்பெண் சிலீரென ஈரம் விட்டு சுவர்ப் பல்லியாய்ää ஒட்டி ஒடுங்கி நடுநடுங்கää.  தீரகேசரியை  அஞ்சல் ஓட்டக் கோலாகப் பற்றிக் கொண்டுää பெரியவர்ää  வயதுக்கு மீறிய வேகத்துடன்ää நீளம் பாய்ந்து கொண்டிருக்கää முஸ்லிம் மாதுவும் மகளும்ää சிலைத்துப் போய் அமர்ந்திருக்க..

 

டேய்.. யாளுவா.. வா..வாடா வடா.. கெதியா.. ஓடுவம்..

 

மஹ்ஸா..ன்!   அதுல்..லா..

 

      நானும் யாளுவாவும்ää அவனது விறைத்த வாயுடன் கதவருகே கிடந்த சிப்பாயின் சடலத்தைக்; கடந்து பாய.... அதே கணத்தில்ää உள்ளிருந்து டொக்டரும்ää சிப்பாயின் பிணத்தைக் கடந்து எதிர்ப் பாய்ச்சலில் வர-ஓஹ்..!

 

க்ர்ர்ர்ர்ர்க்ம்ம்ம்மஹ்ஹ்

தட்ததத்த தம்மமார்

 

நாங்கள் மூவரும் மணிக்கு முப்பது மைல் வேகத்தில் ஒருவருடன் ஒருவர் மோதிப் பிரிந்து பின் மோதித்  தடுமாறி மூவேறு திக்குகளில் விழுந்தோம்... அடுத்தடுத்துää எத்தனையோ அதிர்ச்சியான சம்பவங்கள் நடந்தேறின.  அவை எல்லாவற்றையும் விடää  எனக்கும் யாளுவாவுக்கும்ää எமது வாழ் நாளிலேயே மறக்க முடியாத அதிர்ச்சிச் சம்பவம்   என்னவென்றால்ää

    

நாங்கள் முட்டி மோதி விழுந்ததில்ää டொக்டர் சேதுமாதவன் னு.ளு (iனெயை) Pஆடு  னு.ர். Phட. (நேற னநடாi ) அவர்கள்  எசகுத் தப்பாக முகம் குப்பற விழுந்து விட்டார்.  விழுந்த வேகத்தில்ää அவர் அதுவரையும்  பெருமையாகக் க(h)ட்டிக் கொண்டிருந்த அவரதுää

 

உண்மையான(?) பொய்ப்பல்செற்  சடுதியில் கழன்று விடுபட்டுää எங்களை நோக்கிச் சிரித்தபடியே  வழுக்கிக் கொண்டு விரைந்து வந்து கொண்டிருந்தது. அரிசிப் பற்கள் என்றும்ää புன்னகை அரசர் என்;றும்ää  பல்கலை வேந்தர் என்றும்ää  பற்பல பட்டங்கள் பெறக் காரணகர்த்தாவாகவிருந்த அவரது விலையுயர்ந்த சீனத் தயாரிப்பு ஹ{வாங்க்கோ பற்தொகுதி  சிவப்பு ஈறுகளுடன்ää இளித்தபடி வந்த வேகத்தைக் கண்டு பயந்து போய்.. திமிர்த்துப் போன வாயுடன்ää  யாளுவா அலறிய அலறலில்....

 

நம்பினால் நம்புங்கள்.. அன்றிலிருந்துää எனது யாளுவாவுக்கு  பல் பிடுங்காத போதும் கூடää  அதன் பின்னர் அந்தப் பல் ஒரு போதும் வலிக்கவுமில்லை.. பல் நோய் வந்ததுமில்லை.இதயம். 2004.

    ௦௦

No comments:

Post a Comment